நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்தநாளை இன்று (ஜூன்.22) கொண்டாடி வருகிறார்.


தனது 10ஆவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய், தன் 18ஆம் வயதில் தன் தந்தையின் நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.


குஷ்பு ட்வீட்


அன்று தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ள விஜய், தன் நெஞ்சில் குடியிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் எண்ணிலடங்கா அன்புக்கு சொந்தக்காரராக உருவெடுத்துள்ளார்.


இன்று காலை தொடங்கி அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் அவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில்,   நடிகை குஷ்பு, ’தம்பி விஜய்’ எனக் குறிப்பிட்டு தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளது அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


”என் தம்பி, உனக்கு வாழ்வில் எல்லா மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் கடவுளின் ஆசிர்வாதமும் இந்தப் பிறந்தநாள் மற்றும் என்றைக்கும் கிடைக்கட்டும்” என வாழ்த்தியுள்ளார்.


 






மின்சாரக்கண்ணா, வில்லு படங்கள்


நடிகர் விஜய்யும் குஷ்புவும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் ’மின்சாரக் கண்ணா’படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் விஜய்யும் குஷ்புவும் மாறி மாறி மோதிக்கொள்ளும் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.




அதே போல் முன்னதாக விஜய்யின் கோரிக்கைக்கு ஏற்ப, நடிகர், இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ’வில்லு’ படத்தின் டைட்டில் பாடலில் கேமியோ பாத்திரத்தில் வந்து குஷ்பு ஆடி இருந்தார். தான் குஷ்புவின் மிகப்பெரும் ரசிகர் என விஜய் பல தருணங்களிலும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Thalapathy 66 Update: விஜய் பிறந்தநாள் கிஃப்ட் வந்தாச்சு..வெளியானது தளபதி 66 படத்தின் அப்டேட்.!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண