Khushbu Sundar: கோயில் கட்டி கொண்டாடப்பட்ட அதே குஷ்பு... மீண்டும் பழைய அழகோடு ‛கம் பேக்’

KhushbuSundar: மீண்டும் கோயில் கட்டி கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. அந்த அளவிற்கு குஷ்பு, குதூகலமாக காட்சியளிக்கிறார். 

Continues below advertisement

‛கொண்டையில் தாழம்பூ... நெஞ்சில் வாழப்பூ... கூடையில் என்னப்பூ...’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கூட, ஸ்கிரீனை பார்த்து கேள்வி கேட்ட காலத்தை யாரும் மறந்துவிட முடியாது. ‛உன்னாட்டம் பொம்பள யாராடி... ஊரெல்லாம் உன் பேச்சு தானடி...’ என அதே பாடலில் இன்னொரு வரி வரும், உண்மையில் ஊரெல்லாம் பேசப்பட்ட , கொண்டாடப்பட்ட நடிகை தான் குஷ்பு. முதன் முதலில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டி கொண்டாடப்பட்டதும் குஷ்புவுக்கு தான். 

Continues below advertisement


வருஷம் 16 படத்தில் அறிமுகமாகி, அடுத்தடுத்து ஹிட் படங்களால் தமிழ் சினிமாவையும், ரசிகர்ளையும் கிறங்கடித்த குஷ்பு, மெல்லிய தோற்றம், குழி விழும் கண்ணம் என அழகால் அறியப்பட்டார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து,அதே குஷ்பு, வெயிட் போட ஆரம்பித்தார். அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் உடல் எடை அதிகரித்தது. ஆனாலும் அவர் நடித்துக் கொண்டு தான் இருந்தார். உடல் மாற்றத்திற்கு ஏற்ப, அவரது கதாபாத்திரங்களும் மாறின .கதாநாயகி என்பதை கடந்து, ஒரு கட்டத்தில் பல நாயகிகளில் ஒருவராக நடிக்க ஆரம்பித்தார். 


பரபரப்பான சினிமா உலகத்திற்கு மத்தியில் அரசியலிலும் வலம் வந்தார் குஷ்பு. இயக்குனர் சுந்தர் சி உடன் திருமணம். இரு பெண் குழந்தைகளுக்கு தாயாக, மனைவியாக, நடிகையாக, அரசியல்வாதியாக பல அவதாரம் எடுத்த குஷ்பு,  தொடர்ந்து ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் களமாடி வருகிறார். பாஜகவில் முக்கிய பொறுப்பில் தற்போதுள்ள குஷ்பு, அக்கட்சியின் கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து, அதற்கான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை அனுகி வருவார்.


பெரும்பாலும் அவரது தோற்றத்தை வைத்து கிண்டல் செய்பவர்களே அதிகமாக இருந்தனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து குஷ்பு களமாடி வந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்த குஷ்பு, அதற்கான முயற்சியில் இறங்கினார். அதன் படி, குறுகிய காலத்தில் அவரது உடல் எடை குறைந்தது. அதே நேரத்தில் திடீரென மெலிந்ததால், அதை வைத்தும் அவரை கிண்டலடிக்கத் தொடங்கினர். 

 

ஆனாலும், குஷ்பு தொடர்ந்து உடற்பயிற்சியை மேற்கொண்டார். தற்போது லண்டனில் இருந்து ஒரு போட்டோவை பதிவு செய்துள்ளார் குஷ்பு. ஆம்... அது வருஷம் 16 படத்தில் அறிமுகமான அதே குஷ்புவின் தோற்றம் தான். பழைய நிலைக்கு மாறிவிட்டார் குஷ்பு. பார்க்கவே ரம்யமாக காட்சி தரும் குஷ்பு, தமிழ்நாடு திரும்பினால், மீண்டும் கோயில் கட்டி கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. அந்த அளவிற்கு குஷ்பு, குதூகலமாக காட்சியளிக்கிறார். 

Continues below advertisement