Actress Khushbu: லண்டனில் சொந்த வீடா...முட்டாள்களா நீங்கள்... கொந்தளித்த நடிகை குஷ்பூ

லண்டனின் சொந்த வீடு வாங்கியதாக பலரும் கேள்வியெழுப்பிய நிலையில் நடிகை குஷ்பூ அதுதொடர்பாக தனது விளக்கத்தை அளித்துள்ளார். 

Continues below advertisement

லண்டனின் சொந்த வீடு வாங்கியதாக பலரும் கேள்வியெழுப்பிய நிலையில் நடிகை குஷ்பூ அதுதொடர்பாக தனது விளக்கத்தை அளித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான குஷ்பூ,  ஒருபுறம் சினிமா மறுபுறம் அரசியல் என இரு தளங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். கடைசியாக தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்த அவர், அடுத்ததாக தனது அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் காபி வித் காதல் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகியிருந்தது.

அதேசமயம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் லண்டன் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சுற்றுலா செல்லும் அவர் அங்கிருந்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன் லண்டனில் இருக்கும் புதிய வீட்டில் என் முதல் கோப்பை தேநீர் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். 

இதனைக் கண்ட பலரும் குஷ்பூ லண்டனின் சொந்த வீடு வாங்கிவிட்டதாக கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக குஷ்பூ விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், லண்டனில் புதிய வீடு என்று தானே சொன்னேன். சொந்த வீடு என்றா சொன்னேன். முட்டாள்களே நீங்கள் எப்போதாவது வாடகை வீடு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?? சிலருக்கு சுதந்திரமான, வெற்றிகரமான பெண்ணைப் பார்ப்பது  பொறாமையை ஏற்படுத்துகிறது. எனவே நான் லண்டனில் தங்கியிருக்கும் போது நீங்கள் தூக்கமில்லாத இரவுகளை அனுபவியுங்கள் என தெரிவித்துள்ளார்.  

Continues below advertisement