ரஜினியின் தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர் சி விலகியது ரசிகர்களிடையே பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக நடிகை குஷ்பு மற்றும் ரஜினியை வைத்து ரசிகர் ஒருவர் அநாகரீகமான முறையில் பதிவிட்டதும் அதைத் தொடர்ந்து குஷ்பு அவருக்கு பதிலடி கொடுத்ததும் இந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்கியது. தற்போது விஜய் ஃபோட்டோவை டிபியாக வைத்துள்ள நெட்டிசன்கள் சிலர் குஷ்புவை ட்ரோல் செய்து வரும் நிலையில் அவர்களுக்கு சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார் குஷ்பு.
விஜய் ரசிகர்களுடன் குஷ்பு வாக்குவாதம்
குஷ்புவுடன் ரஜினி ஐட்டம் சாங் கேட்டதால் தான் தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார் என ரசிகர் ஒருவர் மீம் வெளியிட்டார். இதற்கு குஷ்பு 'இல்ல உன் வீட்ல இருந்து யாரையாவது அட வைக்கலாம்னு முடிவு பண்ணோம்' என்று பதிலளித்திருந்தார். இதேபோல் பல்வேறு எக்ஸ் கணக்கில் இருந்து சுந்தர் சி படத்தில் விலகியதற்கான காரணமாக குஷ்புவை வைத்து தகாத முறையில் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த பதிவுகளுக்கு மெளனம் காக்காமல் சரவெடியாய் சீரிப் பாய்ந்து வருகிறார் குஷ்பு
இந்த பதிவிடும் நபர்கள் விஜய் புகைப்படத்தை தங்களது ப்ரோஃபைல் பிக்ச்சராக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த வகையில் ரசிகர் ஒருவரின் பதிவிற்கு குஷ்பு இப்படி பதிலளித்துள்ளார் ' பாவம் என் தம்பி விஜய். உன்ன மாதிரியான ஆளுங்களால அவருக்கு தான் அவமானம். உன்ன பெத்தவங்க பாவம் பெத்துட்டாங்க ஆனா ஆள் ஆக்க முடியல" என பதிலளித்துள்ளார்.