பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில்  நடிகை கீர்த்தி சுரேஷ்-ம் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உறுதி என்றால் முதன்முறையாக இயக்குனர் பாலாவின் கதையில் கீர்த்தி சுரேஷ் இணைவார். முன்னதாக, 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


பாலா இயக்கத்தில் புதிய படத்தை சூர்யா தயாரிக்கவுள்ளார் என்ற செய்தி , சில மாதங்களாக உலா வந்துக்கொண்டிருந்த நிலையில் , சமீபத்துல் இந்த கூட்டணி இணைவது உறுதியானது. 


இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சூர்யா, “என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…” என்று பதிவிட்டார். 


 


பாலா - சூர்யா கூட்டணியில் வெளியான 'நந்தா', 'பிதாமகன்' உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும், விஷால், ஆர்யா நடித்த 'அவன் இவன்' திரைப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு கதாப்பாத்திரமாக வந்து சென்றிருப்பார்.


சூர்யாவின் திரையுலக பயணத்தை நந்தாவிற்கு முன், நந்தாவிற்கு பின் என பிரிக்கலாம். அந்த அளவுக்கு சூர்யாவின் சினிமா கெரியரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படம் நந்தா. அதன் காரணமாத்தானோ என்னவோ சூர்யா , இயக்குநர் பாலா மீது மிகுந்த மரியாதையுடன் நடந்துக்கொள்வாராம். பாலா இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் நாச்சியார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டை பெற்றார். 


அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'சாணிக் காயிதம்' என்பது கீர்த்தி சுரேஷின் அடுத்த திரைப்படமாகும். இதில் புகழ் பெற்ற இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 


சூர்யா தயாரிப்பில் வெளியான  36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் உள்ளிட்ட படங்கள் குறிப்பிட்ட வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டன.இறுதியாக வெளியான ஜெய்பீம் திரைப்படம் உலகளவில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. 


தற்போது, சூர்யா தயாரிப்பில் பாலா இயக்கும் இந்த திரைப்படமும் தமிழ் சினிமாவுலகில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைப்பெற்று வரும் சூழலில், கதாநாயகனாக நடிகர் அதர்வா முரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலா இயக்கத்தில் அதர்வா, பரதேசி என்னும் படத்தில் நடித்திருந்தார்.‘எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது என்று குறிப்பிடத்தக்கது.     


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண