WATCH VIDEO: 'டம் டம்' பாடலுக்கு டார்லிங் உடன் டான்ஸ் ஆடும் கீர்த்தி.! - வைரல் வீடியோ..!

குறிப்பாக பிரபலங்கள் வெளியிடும் வீடியோக்கள் பெருமளவில் வரவேற்பை பெற்று கூடுதல் கவனம் பெறுகின்றன. அவர்கள் செய்யும் குறும்பு தனமான வீடியோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கின்றன.

Continues below advertisement

நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள்,  பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.

Continues below advertisement

குறிப்பாக பிரபலங்கள் வெளியிடும் வீடியோக்கள் பெருமளவில் வரவேற்பை பெற்று கூடுதல் கவனம் பெறுகின்றன. அவர்கள் செய்யும் குறும்பு தனமான வீடியோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதால் அது வேகமாக பரவி வைரலாகிறது. 

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நாய் குட்டியுடன் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. எனிமி படத்தில் இடம்பெற்ற  ‘டம் டம்’ பாடலுக்கு கீர்த்தி சுரேஷின் மடியில் உட்கார்ந்து நாயும், அவரும் சேர்ந்து நடனமாடுவது போல் வீடியோ உள்ளது.

Watch video: முதல்முறையாக பீட்சா சாப்பிட்ட பாட்டியின் ரியாக்‌ஷன் - வீடியோ பாருங்க..!

 

 

இந்த பாடலுக்கு இசையமைத்த தமன், இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து,  வாவ்...சூப்பர்..சூப்பர் கியூட்டாக உள்ளது. நன்றி கீர்த்தி சுரேஷ் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola