இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, அதன் கேப்ஷனில் பெண்களைக் குறித்து ஒரு சிறிய குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், `பெண்கள் தைரியம் மிக்கவர்கள். நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள். எந்த மொழியைப் பேசினாலும், எப்படி உடை அணிந்தாலும், நாங்கள் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கும் வேலை எதுவாக இருந்தாலும், முக்கியமானது என்னவென்றால், எங்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது, எங்களுக்கான வாழ்க்கையைச் செதுக்குவதற்கான சுதந்திரம் எங்களிடம் இருக்கிறது. வலிமையும், நெகிழ்ச்சியும் கொண்ட பெண்களை நாம் அறிந்திருக்கும் வரை, அவர்களை நாம் மதிக்க வேண்டும், அவர்களை முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டும், அவர்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் நம்மைப் போலவே உருவாக்கப்பட்டவர்கள். நாம் எப்படி இருந்தோமோ, எப்படி இருக்கிறோமோ அப்படியானவர்கள் மட்டுமின்றி, நமது தாய்கள், சகோதரிகள், மகள்கள் ஆகியோரின் கூட்டுப் போராட்டங்களால் உருவாக்கப்பட்டவர்கள். நாம் ஒற்றுமையாக நின்றால் மட்டுமே நமக்கான இரட்சிப்பு நமக்குக் கிடைக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளதோடு, தனது வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.




சமீபத்தில் தான் கருவுற்றிருப்பதாகப் பதிவிட்டிருந்தார் நடிகை காஜல் அகர்வால். தன்னுடைய கணவர் கௌதம் கிட்ச்லூவுடன் தனது முதல் குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால், தனது கர்ப்பக் காலத்தின் ஃபோட்டோஷூட்களால் சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

நடிகர் காஜல் அகர்வால் நடித்துள்ள `ஹே சினாமிகா’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நடன இயக்குநர் பிருந்தா இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் நடிகர்கள் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதரி முதலானோர் நடித்துள்ளனர்.