இன்ஸ்டாகிராமில் நடிகை ஜோதிகாவின் பாடல் ரீ- கிரியேட் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி இதனைப் பார்த்த ரசிகர்கள் கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 


வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஜோதிகா. நடிகை நக்மாவின் தங்கை என்ற அடையாளத்தோடு அறிமுகமான அவர், இன்றைக்கும் பெரிய அளவில் நடிக்காவிட்டாலும் முன்னணி நடிகையாகவே கொண்டாடப்படுகிறார். தன்னுடன் 6 படங்களில் ஜோடியாக நடித்த சூர்யாவை  ஜோதிகா காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினர் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக திகழ்கின்றனர். 


2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் கிட்டதட்ட  8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரீ கொடுத்த ஜோதிகா, அதன் பின்னர் கதையின் நாயகியாக பல படங்களில் நடித்து விட்டார். இப்படியான நிலையில் அவரின் பாடல் ரீ- கிரியேட் செய்யப்பட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 1999 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான “பூவெல்லாம் கேட்டுப்பார்” என்ற படம் வெளியானது. இதில் தான் சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த முதல் படமாகும். 






இதில் ஜோதிகாவுக்கு “பூவ பூவ பூவே” என்னும் பாடல் அறிமுக காட்சியாக வைக்கப்பட்டிருக்கும். நித்ய ஸ்ரீ மகாதேவன் பாடிய இந்த பாடல் ஜோதிகாவை அந்த காலக்கட்டத்தில் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. இந்த பாட்டுமே வித்தியாசமாகவே படமாக்கப்பட்டிருக்கும். யுவன் ஷங்கர் ராஜா தான் இந்த படத்துக்கு இசையமைத்த நிலையில் இப்பாடலை இன்ஸ்டாகிராமில் பிரபலமான சரத் மற்றும் கைலாஷ் இருவரும் ரீ- கிரியேட் செய்துள்ளனர். 


இதனைப் பார்த்த பலரும், “காஸ்ட்யூம் செலக்‌ஷன் செம.. டேய் டேய் அதுக்குனு சன்னமல்லி செடில ரோஜா பூக்குமா அதுவும் கலர் கலரா.. நடிகை ஜோதிகா பார்க்கும் வரை ஷேர் செய்யவும்..என்னயா இது ஒரு செடில ஐந்து மாடல் பூ பூத்திருக்கு...ஜோதிகாவுக்கு டஃப் கொடுக்கும் சரத்” என கலாய்த்து கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். 




மேலும் படிக்க: Rakul Preet Singh: ‘கனவுகள் எளிதானவை அல்ல’.. சினிமாவில் போராடி வென்ற கதையை பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்...!