தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான  ‘96’ படத்தில் இளம் வயது த்ரிஷாவாக அறிமுகமானவர் நடிகை கெளரி கிஷன். இந்தப்படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து மலையாளத்தில்  ‘மார்கம் களி’ படத்தில் நடித்து அங்கும் நடிகையாக அறிமுகமானார். 


விஜயுடன் இணைந்த கெளரி


இதனையடுத்து 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான  ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷ் நடிப்பில் வெளியான  ‘கர்ணன்’ படத்திலும் நடித்து கவனம்  ஈர்த்த கெளரி கிஷன் அண்மையில் அமேசான் ப்ரைமில் வெளியான  ‘புத்தம் புது காலை’ படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில்கவனம் பெற்றார். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் கெளரி, ஜெர்மனி தயாரிப்பான Volkswagen Taigun காரை வாங்கியிருக்கிறார். இந்த காரின் விலை 13.50 லட்சம் முதல் 22 லட்சம் வரை சென்னை விற்கப்படுகிறதாம். Volkswagen Taigun ஒரு SUV காராகும். 



காரின் விபரம்: - 


காரின்  சிசி - 999 CC,1498CC  (பெட்ரோல் இன்ஜின்)


5 நிறங்களில் கிடைக்கிறது 


லிட்டருக்கு 18.47 கி.மீ மேலேஜ் கொடுக்க வல்லது. 


999 சிசி காரின் விலை - 13.29 லட்சம் ரூபாய் முதல் 19.74 லட்சம் வரை விற்கப்படுகிறது.   


498 சிசி இஞ்சின் காரின் விலை - ரூபாய் 18.62 முதல் 21.72 லட்சம் வரையில் விற்கப்படுகிறது.