தமிழ் சினிமாவின் ஒரு புதுவிதமான இயக்குனர் பா. ரஞ்சித். தனது ஒவ்வொரு படத்திலும் ஒரு அழுத்தமான பதிவை மக்கள் மனதில் ஏற்படுத்தும் வித்தகரான பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "நட்சத்திரம் நகர்கிறது". இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய டிரெண்ட்டையே உருவாக்கியுள்ளார் என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவை அடுத்து கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்களின் பாராட்டையும் குவித்துள்ளது.
காதல் பாலின பேதங்களும் அற்றது:
இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் முக்கித்துவமான கதாபாத்திரம் அதை அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர். காதல் என்பது சாதி, மதம், நிறம் என்பதை காட்டிலும் பாலின பேதங்களும் அற்றது என்பதை மிகவும் அழகாக படமாக்கியுள்ளார். படத்திற்கு தென்மாவின் இசை ஒரு கூடுதல் பலம்.
காயத்ரி ட்வீட் :
நட்சத்திரம் நகர்கிறது படத்தின் பிரிவியூ ஷோ வெளியானதில் இருந்தே நேரடியான பாராட்டுகளும் சமூக வலைத்தளங்கள் மூலமும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கையில் தற்போது "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்" பட புகழ் நடிகை காயத்ரி தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். தனது பதிவில் " நட்சத்திரம் நகர்கிறது படத்தை பார்த்த போது எனக்கு சிரிப்பு, கோபம் மட்டுமின்றி சில சமயத்தில் கண்ணீரும் வந்தது. அது ஏன் நிகழ்கிறது என்று எனக்குள் கேள்வியும் எழுந்தது. ஒரு கலையாலும் அதன் கலைஞர்களாலும் ஒருவரின் மனதின் உணர்ச்சிகளை மாற்ற இயலும் என்பது இந்த திரைப்படம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி பட்ட ஒரு அருமையான கலையை படைத்ததற்கு நான் பா. ரஞ்சித்திற்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். படத்தின் அர்ஜுன் கதாபத்திரத்தில் நடித்த கலையரசனின் நடிப்பு ஒரு வலிமிகுந்த பெரும் பங்களிப்பு. அது மிகவும் உண்மையானதாக இருந்தது" என கூறி பதிவிட்டுள்ளார் நடிகை காயத்ரி.
விக்ரம் படத்தில் காயத்ரி:
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "விக்ரம்" படத்தில் நடிகை காயத்ரி ஒரு சிறிய ரோல் என்றாலும் மிகவும் முக்கியமான ரோலில் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.