முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்து வெளியான விருமன் படத்தின் பிரஸ் மீட் அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய நடிகர் கார்த்தி அதில் பலரைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். நடிகர் ராஜ்கிரணுடன் கொம்பன் படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்த அவர், “அந்தப் படத்தில் அவர் என் மாமனார் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தை பார்த்த பலர் அதன் பிறகுதான் தனது மாமனாருடன் பேசத் தொடங்கியதாகக் கூறினார்கள்.உண்மையில் மாமனார்கள் நமக்கு கிடைத்த கிப்ட் என் மாமனார் என்னிடம் பாசமாக இருப்பார்.ஆனால் அவரால் அதனை வெளிப்படுத்த முடியாது. வந்து தோளில் தொடுவார்.நகர்ந்துவிடுவார்.நான் தான் அவரிடம் போய் வலியப் பேசுவேன். மனிதருக்கு தெரியாத உலக நடப்புகளே இருக்காது. ராஜ்கிரண் சாருக்கு ஒரு மகன் இருந்தாலும் என்னை அவர் மகன் போலதான் நடத்துவார்.உலகத்தில் கவலைக்கு குடிக்கனும் என்றால் பெண்கள்தான் குடிக்கனும்.உடல் வலியை மறக்கதான் ஆண்கள் குடிக்கிறார்கள் என்பார். விருமன் படத்தின் கதையைக் கூட அவர் சரிவரக் கேட்கவில்லை. நான் நடிக்கிறேன் என்றதும் ஓகே சொல்லிவிட்டார்”
“படத்தில் நடித்த மற்றொரு முக்கியமான நபர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ்.அவர் இல்லையென்றால் கிளைமாக்ஸ் கிடையாது என முத்தையா சொல்லிவிட்டார்.அதனால் அவரும் படத்தில் நடிக்க டபுள் ஓகே. பிரகாஷ்ராஜ்,”நான் படத்தில் காசு வாங்காம கூட நடிப்பேன் ஆனால் சம்பளம் இல்லாமல் நடிக்கவே மாட்டேன் என்பார். இவர்கள் எல்லாம் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. இந்தப் படத்தில் உடன் நடித்த அனைவருக்கும் நன்றி.”
”எனக்கு கோரியோகிராபி செய்த சாண்டி மாஸ்டர். விடியற்காலை 3 மணிக்கு ஷாட் வைப்பார். என்ன சீன் எனக் கேட்டால்...குட்டிக்கரணம், சோமர்சால்ட் என்பார். அந்த வேளையில் இதெல்லாம் செய்யவேண்டும் என்றால் அழுகையாக வரும். சிநேகன் சாரின் பாடல்வரிகள்தான் எனர்ஜி..”என அடுத்தடுத்து தன் உடன் பணியாற்றிவர்கள் பற்றி சுவாரசியமாக அடுக்குகிறார் கார்த்தி.