தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக நடித்து அசத்தியவர் காயத்ரி ஜெயராமன். சினிமா முதல் சீரியல் குறித்து மனம் திறந்து பேசியதிலிருந்து…


கேள்வி: இளையதளபதி விஜய் உடன் நடித்த உங்கள் அனுபவம்:


பதில்: இப்போ விஜய் நிறைய மாறிட்டாங்க. விஜயிடம் அதிகபடியான மாறுதல்களை பார்கிறேன். அப்போது விஜய் ஷூட்டிங் செட்டில் இருக்கிறார் என்பதே தெரியாது. ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால், தற்போது விஜய் மேடையில் அவ்வளவு பேசுகிறார். விஜய் எனக்கும் எப்போது ஒரு கம்ஃபோட் கொடுத்திருக்கிறார்.ரொம்பவே அமைதியானவர். நல்லவர். அவரை போல ஒருவரை நான் சந்தித்தது இல்லை. அவர் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்வார்.


கேள்வி: விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். உங்கள் விருப்பம் என்ன?


பதில்: என்னைக் கேட்டால், நல்ல தலைவருக்கான தகுதி அவரிடம் இருக்கிறது. அவருடைய பேச்சுகள் மிகச் சிறந்த தலைவர்கள் பேசுவது போல இருக்கிறது. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று காத்திருக்கிறது, ரசிகர் பட்டாளம். விஜய் அரசியலுக்கு வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். மக்களும் புதிய தலைவரை எதிர்பார்க்கிறார்கள்.


கேள்வி: விஜய்-அஜித் இடையே இருக்கும் நட்பு பற்றி சொல்லுங்களேன்:


பதில்: விஜய்-அஜித் இருவருக்கிடையே இருக்கும் நட்பு இன்று ஏற்பட்டது இல்ல. ஆரம்ப காலத்தில் இருந்தே அவர்கள் நண்பர்கள்தான். ரஜினி-கமல்ஹாசன் நட்பு போல போட்டிகளுக்கு இடையே மாபெரும் ஸ்டார்கள் தொடர்ந்து நட்புடன் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


கேள்வி: சீரியலில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?


பதில்:  சன் டிவி நாடகத்தில் முதலில் சவுண்ட் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தான் சம்மதித்தேன். பின்னர், கதை போக போக சவுண்ட் சரோஜா, வாட்டர் வனஜாவாக மாற்றபட்டது. சவுண்ட் சரோஜா ஒரு வக்கீல் எப்போதும் சண்டை போடுவாள்.வாட்டர் வனஜா தாய் பாசம் உள்ள தாய் அவள் அடிக்கடி அழ வேண்டியிருந்தது. ஆனால்,நிஜ வாழ்க்கையில் நான் அழவே மாட்டேன்.  இப்படி இரண்டு கதாபாத்திரத்திற்கும் வேறுபாடுகள் அதிகம். ஆனால் இது எனக்கு புது வித அனுபவம்தான்.


ஆரம்ப காலத்தில் நாடகம் பார்த்து அழுகும் அம்மாவை பல முறை கிண்டல் செய்துள்ளேன். நான் நாடகத்தில் நடிக்க போகும் போது மாறுபட்ட கதாபாத்திரங்களிலே நடிக்த விரும்பினேன். ஆனால் இறுதியில் என்னையும் கண்ணீர் ததும்பிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விட்டார்கள்.


கேள்வி: நீங்கள் சினிமாவில் நடித்த காலத்தில் பாலியல் தொந்தரவுகள்  இருந்திருக்கிறதா?


பதில்: நிச்சயமாக. நான் இதை மறுப்பது சரியாக இருக்காது. சினிமா துறையில் நிறையவே இருக்கும். நடிப்பு வாய்ப்புகளுக்காக மிரட்டி பலர் தவறாக நடந்துப்பாங்க. சினிமாவில் வெற்றியாளர்களைத் தான் மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் அதன்பின் நிறைய போராட்டங்கள் இருக்கு. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் ரீதியிலாக தொல்லைகளை கடந்துதான் சினிமாவில் இருக்காங்க. யாராவது அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், அவர்கள் 50% உண்மையை மறைக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். சினிமா துறை மட்டுமல்ல, எல்லா துறையிலும் பெண்களுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது.


கேள்வி: மஞ்சள் காட்டு மைனா பாடல் சூப்பர் ஹிட். ஆனால்,அந்தப் பாடல் ஷூட்டிங்கில் தவித்து விட்டேன் என  பேட்டிகளில் நீங்கள் சொல்லியிருப்பது பற்றி:


பதில்: தமிழ் சினிமாவில் ஊட்டியில் ஷீட்டிங் நடக்கும்போது குறைவான ஆடைகளுடன் நடிக்க வைப்பார்கள். ராஜஸ்தான் பாலைவனத்திற்கு அழைத்து சென்று கோர்ட்சூட் போட்டு ஆடச்சொல்வார்கள். மஞ்சள் காட்டு மைனா பாடல் சமயத்திலும் அப்படிதான் நடந்த்து. பிரபு தேவாவிற்கு குளூருக்கு அடக்கமான போலோ சூட் உடை கொடுத்துவிட்டனர். ஆனால், எனக்கு அப்படியில்லை. இந்த மாதிரியான விஷயங்கள் பலற்றில் நான் சிக்கி தவித்துள்ளேன். நான் ரொம்ப கடுப்புல தான் ஷூட்டிங் போனேன். ஏன்னா, ரிகர்சல் பண்ண எல்லா ஸ்டெபஸையும் மாற்றிவிட்டார்.


கேள்வி: பிரபுதேவா உடன் பணியாற்றியது பற்றி சொல்லுங்க:


பதில்: அவர் சிறந்த நடன இயக்குநர். ஆனால், ஆடத் தெரியாதவர்களுக்கு அவர் எமன் என்றுதான் சொல்வேன். அவ்வளவு பயிற்சிகள் அளிப்பார். நாங்கள் வாரம் முழுவதும் பயிற்சி செய்துள்ள ஸ்டெப்கள் பாடல் காட்சிகள் ஷூட்டிங் எடுக்கப்படும்போது இருக்காது. ஷூட்டிங் முடிச்சிட்டும் ரிகர்சல்ஸ் இருக்கும்.


நான் பரநாட்டியம் கத்துட்டு இருந்தப்போ, அவருடன் பணியாற்ற கம்பெனியில் இணைந்தபோது, எனக்கு ஆட தெரியாது என்றுதான் சொன்னேன். அதானால் வந்த வினை. நேரம் காலம் பார்க்கமாக பயிற்சி செய்திருக்கேன்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண