நடிகை திவ்யபாரதி தெலுங்கில் நடித்துள்ள கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது படத்தின் இயக்குநர் நரேஷ் குப்பிலி அநாகரீகமான வார்த்தையால் தன்னை குறிப்பிட்டதாக சமூக வலைதளத்தில் திவ்யபாரதி பதிவிட்டிருந்தார். மேலும் இந்த சம்பத்தில் இயக்குநரோடு நட்பு பாராட்டிய படத்தின்  நாயகன் சுதீர் ஆனந்தையும் அவர் விமர்சித்திருந்தார். இதனால் சுதீர் ரசிகர்கள் திவ்யபாரதியை சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். நேற்று கோட் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தை ப்ரோமோஷ் செய்ய நடிகர் சுதீர் மற்றும் இயக்குநர் ஆகிய இருவரும் வரவில்லை.  இந்த பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் திவ்யபாரதி .

Continues below advertisement

நரேஷ் குப்பிலி சர்ச்சை பற்றி திவ்ய பாரதி 

திவ்யபாரதி பேசுகையில் " இந்த படத்தின் செட்டில் அந்த இயக்குநரின் ஆட்டிடியூட் எப்போதும் அப்படிதான் இருக்கிறது. ஆனால் வேலை செய்யும் இடத்தில் நாம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். நான் எல்லாரிடமும் போய் எனக்கு மரியதை கொடுங்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்க முடியாது.  படப்பிடிப்பில் அவர் என்னை சிலக்கா என்று அழைத்தார். சிலக்கா என்பதன் பொருள் கிளி என்று எனக்கு தெரியும்.ஆனால் அதை எந்த அர்த்தத்தில் பயண்படுத்துகிறார் என்பது முக்கியம். அதே நேரத்தில் படத்தின் ப்ரோமோ வெளியானபோது அவர் அதை சமூக வலைதளத்தில் திட்டிக்கொண்டிருந்தார். எனக்காக நான் நிற்க வேண்டும். எனக்கு என் சுயமரியாதை முக்கியம். வேற யாரும் வந்து எனக்காக பேசமாட்டார்கள். அதனால் தான் நான் ட்வீட் செய்தேன். இந்த நிகழ்வு நடந்தபின்னும் அந்த இயக்குநருடன் படத்தில் நடிகர் சுதீர் நட்பு பாராட்டி வருகிறார். எனக்கும் அந்த இயக்குநருக்கும் பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தும் அவர் இயக்கும் படத்தில் என்னை ஒரு ஐட்டம் சாங் ஆடுறீங்களா என்று கேட்டு அவர்கள் மறுபடி மறுபடி என்னை வம்பிழுக்கிறார்கள். உங்களுடன் பணியாற்றிய ஒருவரைப் பற்றி நீங்கள் சமூக வலைதளத்தில் வந்து தவறாக பேசக்கூடாது. உங்களுக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை என்றால் அதை அவருடன் சேர்ந்து பேச வேண்டும் அதைவிட்டு மறுபடி மறுபடி என்னை அந்த பிரச்சனைக்குள் இழுப்பது தவறு" என திவ்யபாரதி கூறியுள்ளார்