செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் சீரியலிலும் நிஜ வாழ்விலும் கருவுற்றிருக்கும் நிலையில், ஷுட்டிங்கின்போது அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட வீடியோவை மகிழ்ச்சியுடன் திவ்யா பதிவிட்டுள்ளார்.


தன் கணவர் அர்னவால் பாதிக்கப்பட்டு இல்லங்கள்தோறும் உள்ள தமிழ் சீரியல் ரசிகர்களின் அனுதாபங்களைப் பெற்றவர் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்.


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமான திவ்யா, விஜய் டிவியின் ‘செல்லம்மா’ தொடரில் நடித்த அர்னவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


இவர்கள் இருவருக்கும் என தனி ரசிகர் பட்டாளம் இருந்த நிலையில், தொடர்ந்து தங்கள் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருவரும் வலம் வந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன் இந்தத் தம்பதிக்குள் பூதாகரமாக சண்டை வெடித்து, ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  


அதன்படி  கருவை சுமக்கும் தன்னை அர்னவ் அடித்ததாகவும், வேறு ஒரு நடிகையுடன் அர்னவ் நெருங்கிப் பழகி வருவதாகவும், தான் அர்னவ்வுக்காக மதம் மாறியதாகவும் திவ்யா புகார் அளித்திருந்தார். ஆனால், திவ்யா கருக்கலைப்பு செய்யும் நோக்கில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பதிலுக்கு அர்னவ் புகார் அளித்தார். 


சின்னத்திரை வட்டாரத்தில் இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,சென்ற ஆண்டு அக்.14ஆம் தேதி அர்னவ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


தொடர்ந்து அர்னவ் ஜாமீனில் சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், மன அழுத்தத்தில் இருந்து திவ்யா கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்ததுடன் தனது இன்ஸ்டாவில் தொடர்ந்து தன் பர்சனல் பக்கங்களைப் பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
 
மேலும் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் திவ்யா தான் நடித்து வரும் செவ்வந்தி சீரியலிலும் நிறைமாத கர்ப்ப்பிணியாகவே நடித்து வருகிறார். இந்நிலையில், திவ்யா தன் செவ்வந்தி சீரியல் காட்சியில் தனக்கு வளைகாப்பு நடத்தப்படும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சீரியல் காட்சியுடன் சேர்த்து கேமராவுக்கு பின்னும் திவ்யாவுக்கு சீரியல் குழுவினர் வளைகாப்பு நடத்தி மகிழ்வித்த இந்த வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.






இதேபோல் முன்னதாக ஷூட்டிங் தளம் மற்றும் தன் வீட்டில் வளைகாப்பு நடத்தப்பட்ட வீடியோவையும் திவ்யா பகிர்ந்திருந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


மேலும் படிக்க: Mayilsamy Death: கண்கலங்கிய உதயநிதி... கண்ணீர் விட்டு அழுத சித்தார்த்.... மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்!