விமானத்தில் சக பயணி ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக பிரபல மலையாள நடிகை திவ்யா பிரபா குற்றம் சாட்டியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement


கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லோக்பால் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் திவ்ய பிரபா. இவர் தமிழில் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் துணை வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். அதேசமயம் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். மும்பை போலீஸ், கோல்ட் ஸ்டோரேஜ், சிம், இதிஹாசா, பையா பையா, வேட்டா, டேக் ஆஃப், கம்மார சம்பவம், நான்சென்ஸ், பிரதி பூவங்கோழி, நிழல், மாலிக், அரியிப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் ஆக திவ்ய பிரபா உள்ளார். 


4 சீரியல்களிலும் நடித்துள்ள இவர், கேரள அரசின்  சிறந்த சின்னத்திரை நடிகை விருதையும் வென்றுள்ளார். இப்படியான நிலையில் நேற்று அக்டோபர் 9 ஆம் தேதி மும்பையில் இருந்து கொச்சிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ 681ல் திவ்ய பிரபா பயணம் செய்தார். அப்போது சக பயணி ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக அவர் கேரள போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்திவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சக பயணி குடிபோதையில் இருந்ததாகவும், தனக்கு இடையூறு விளைவிக்கும்படி நடந்து கொண்டதால்  தான் அவதிப்பட்டதாகவும் தெரிவித்தார்






இதனைப் பற்றி விமானப் பணிப்பெண்ணிடம் நான் புகார் அளித்தேன். இருந்த போதிலும் விமான ஊழியர்கள் சார்பில் விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு வேறு இருக்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது மட்டுமே எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு தான் பிரச்சினை குறித்து நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விமான நிலையத்தில் உள்ள போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவித்தனர் என கூறி தனது விமான டிக்கெட்டையும் இணைத்துள்ளார். மேலும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 




மேலும் படிக்க: Israel-Hamas War: இஸ்ரேல் - ஹமாஸ் போரில் நாகினி சீரியல் நடிகையின் சகோதரி, கணவர் கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!