தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காதலர் தின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர்கள் தங்கள் துணைக்கு ரோஜா பூ முதல் விலை உயர்ந்த பொருட்கள் வரை பரிசாக வழங்கி தங்கள் அன்பையும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தினர். அதே சமயம் சமூக வலைத்தளங்கள் முழுக்க காதலர் தின பதிவுகளை பார்க்கவும் முடிந்தது. மேலும் கோயில்கள் கடற்கரை பூங்காக்கள் என எங்கு திரும்பினாலும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. இதனிடையே சினிமா பிரபலங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து கொண்டனர். 


இதில் சில நடிகர்கள் தங்கள் காதலர்களோடும் இல்வாழ்க்கை துணையோடும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர். சிலரோ தனியாக இருக்கும் புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு ரசிகர்களுக்கு காதலர் தினம் பற்றி தங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினர். இப்படியான நிலையில் இளம் நடிகையான தர்ஷா குப்தா நேற்றிரவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.


அதில் சிவப்பு நிற கவர்ச்சி உடையில் காதலர் தின புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில் "காதல் என்பது கண்ணில் தோன்றி கனவில் முடிவதில்லை. அது மனதில் தோன்றி மரணம் வரை நீடிப்பது. அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டிருந்தார். அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் சரி தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அன்றைய நாள் முடிவுக்கு வராது என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. 






 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவளும் நானும் என்ற சீரியல் மூலம் கலை உலகில் தர்ஷா குப்தா நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும், காமெடி சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு ரசிகர்களுடைய பிரபலமானார். இவரை 2021 ஆம் ஆண்டு தான் இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் மோகன் ஜி. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.