பார்க்கிங் படன் வெளியாகி 75 நாட்கள் நிறைவடையும் நிலையில் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


பார்கிங்


அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கிய படம் பார்க்கிங். சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர்  நடித்துள்ளார்கள். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்த நிலையில், ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.


கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இரண்டு ஆண்களுக்கு இடையில் ஏற்படும் ஈகோ  எந்த அளவிற்கு தீவிர பிரச்சனையாக மாறுகிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் எப்படி பாதிக்கப் படுகின்றன என்பதை மையமாக வைத்து  நகைச்சுவை , செண்டிமெண்ட். த்ரில்லர் என சுவாரஸ்யமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்திருந்தது.


பார்க்கிங் படம் வெளியான சமயத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இருந்தபோதிலும் படத்திற்கான வரவேறு குறையாமல் இருந்தது.


பார்க்கிங் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சென்னையில் இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படத்தின் இயக்குநருக்கு தங்க வளையம் பரிசாக அணிவித்தார். இப்படத்தில் ஹீரோ ஹீரோயின் காம்பினேஷனை விட ஹீரோ வில்லன் காம்பினேஷன் ரசிகர்களால் அதிகம் பாராட்டப் பட்டது. ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் ஆகிய இருவருக்கு இடையில் இருந்த கெமிஸ்ட்ரி படத்தைத் தாண்டி நிறைய நிஜ மனிதர்களுடன் தொடர்பு படுத்தும் வகையில் அமைந்திருந்தது.


75 நாள் கொண்டாட்டம்






திரையரங்கத்தைத் தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது பார்க்கிங் திரைப்படம்.  இந்நிலையில் இன்றுடன் 75 நாட்களை பார்க்கிங் படம் நிறைவு செய்துள்ளது. இதனைத் கொண்டாடும் விதமாக படக்குழு சார்பாக சிறப்பு வீடியோ ஒன்றும் வெளியிடப் பட்டுள்ளது. இப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யான் மற்றும் எம்.எஸ் பாஸ்கரின் கதாபாத்திரங்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ள நேர்ந்தால் அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்கிற வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. 




மேலும் படிக்க ; Yezhu Kadal Yezhu Malai : இன்று மாலை வெளியாகிறது ஏழு கடல் ஏழு மலை ஃபர்ஸ்ட் சிங்கிள்! 


Sai Pallavi: நாக சைதன்யாவுடன் ரொமான்ஸ்.. காதலர் தின வீடியோ வெளியிட்ட சாய் பல்லவி!