25 ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் கொண்டாடும் காதல் கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு என்னை சிபாரிசு செய்தார் நடிகர் அஜித் என்று பழைய நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை தேவயாணி.


தமிழ் சினிமாவில் வெளியாகும் காதல் படங்களைக் கொண்டாடாத ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். இன்றைக்கு பேஸ்புக் காதல், ஸ்மார்ட்போன் காதல் என காதலின் வடிவங்கள் மாறியிருந்தால் பார்க்காமலே காதல் என்ற புதிய சிந்தனையை முன்வைக்கும் படியான திரைப்படத்தை உருவாக்கியவர் தான் அகத்தியன். 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் ரசிகர்கள் கொண்டாடும் காவியப் படமான காதல் கோட்டையில் அஜித்குமார், தேவயாணி, ஹீரா ,மணிவண்ணன் போன்றவர்கள் தங்களுடைய நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தியிருப்பார்கள். பல்வேறு வெற்றிகளைக்குவித்த இத்திரைப்படங்கள்  இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் கொண்டாடித்தான் தீர்ப்பார்கள்.


இப்படி பல்வேறு விருதுகளையும், வெற்றிகளைக்குவித்த இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி வந்தது? என்னவெல்லாம் சுவாரஸ்சியமான விஷயங்களெல்லாம் நடந்தது? என்பது குறித்த இனிமையான அனுபவங்களைப் பகிர்கிறார் நடிகை தேவயானி.





சமீபத்திய பேட்டியில் நடிகை தேவயாணி பேசும் போது, நான் புதுமுகமாக அறிமுகமான போது கல்லூரி வாசல் படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது அஜித்தும் என்னுடன் நடித்த சமயத்தில் தான் இயக்குனர் அகத்தியனிடம் என்னைப்பற்றி பேசியுள்ளார். இதனையடுத்து சிவ சக்தி மூவி மேக்கர்ஸில் இருந்து அழைப்பு வந்தது. உடனே கல்லூரி வாசல் பட சூட்டிங் முடித்துவிட்டு இயக்குனர் அகத்தியன் மற்றும்  தயாரிப்பாளரை நேரில் சந்திக்க சென்றேன். ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்வுடன் சென்ற என்னைப்பார்த்தவுடனே இயக்குனர் அகத்தியன், நான் Traditional ஆன பெண்ணை நடிக்கத்தேடுகிறோம். நீங்கள் எப்படி நடிப்பீர்கள்? என கேட்டார் என்றும் அதற்கு உடனே நானும் Traditional ஆன பொண்ணு தான் எனவும், படத்தின் என்னுடைய கேரக்டர் இது என்பதால் தான் இந்த உடையில் வந்துள்ளேன் என்று கூறியதாக தேவயானி கூறினார்.


இதனையடுத்து வழக்கம் போல் போட்டோசூட் மற்றும் ஸ்கிரின்ங் டெஸ்ட் எல்லாம் எடுத்தார்கள். இதில் அனைத்திலும் ஓகே ஆன பிறகு தான் என்னை இப்படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் வாய்ப்புக் கொடுத்தார். இப்படத்திற்காக கடினமாக உழைத்தோம் என்றும் ஆரம்பத்தில் இப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைக்கொடுக்கும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை என பகிரும் தேவயானி இதற்கு வாய்ப்பை வழங்கிக்கொடுத்த அஜித்தை எப்போதும் மறக்கமாட்டேன் என்கிறார்.





காதல் கோட்டையில் மறக்கமுடியாத அனுபவங்கள்:


இப்படத்தில் வரக்கூடிய பெரும்பாலான சீன்கள் ரியலாக எடுத்திருப்போம். ரயில் நிலையத்தில் அத்தனைக்கூட்டத்திற்கு மத்தியில் எடுத்த ஒவ்வொரு சீன்களும் ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை எங்களைக்கொடுத்தது.


மேலும் இறுதிக்காட்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். சூர்யா என்று சொன்னதும் ரயில்ல நிறுத்தி வந்ததைப் பார்க்கும் போதே நிஜமாகவே கண்களில் கண்ணீர் ததும்பும் என்கிறார்.. மேலும் இப்படத்திற்கு முன்னதாக நானும் அஜித்தும் கல்லூரி வாசலில் இணைந்து நடித்தோம். இருவருக்குமே நடிப்பு புதியதாக இருந்தாலும் எங்களால் முடிந்தவரை திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்கண்டுள்ளோம் என மகிழ்வோடு பகிர்கிறார் தேவயானி.