நடிகை சாந்தினி கவர்ச்சி உடையில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றார் இயக்குநர் கே.பாக்யாராஜ். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த சாந்தினியை கடந்த 2010 ஆம் ஆண்டு தான் இயக்கிய சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். சாந்தனு ஹீரோவாக நடித்த இப்படம் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து கல்லூரி படிப்புக்காக சில ஆண்டுகள் சினிமாவுக்கு டாட்டா காட்டிய சாந்தினி, மீண்டும் 2013 ஆம் ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். 


அதே ஆண்டில் தெலுங்கிலும் அறிமுகமான அவர், அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதேசமயம் தமிழில் வில் அம்பு, நையப்புடை, கண்ணுல காச காட்டப்பா, என்னொடு விளையாடு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, கவண், பலூன், மன்னர் வகையறா, வஞ்சகர் உலகம், எட்டுத்திக்கும் பறபற, காதல் முன்னேற்ற கழகம், குடிமகான்  என ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தார். 


கடைசியாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான பொம்மை படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். பெரிய அளவில் காட்சிகள் இல்லையென்றாலும், அவர் கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘ரெட்டை ரோஜா’ நாடகத்தில் ஹீரோயினாக சாந்தினி நடித்திருந்தார்.  


மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரும், நடன இயக்குநருமான நந்தாவை திருமணம் செய்துக் கொண்டார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சாந்தினி அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய செய்வார். இப்படியான நிலையில் அவர் மீண்டும் போட்டோஷூட் நடத்தியுள்ளார். கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தின் கீழ் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 


அதில், “ஹாலிவுட் நடிகை மாதிரி இருக்கீங்க, பேபி, பிரமித்து போயிட்டேன்” என விதவிதமாக  கமெண்டுகளை பதிவிட்டு ஹார்ட் எமோஜிகளை பறக்க விட்டுள்ளனர் ரசிகர்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.