பத்ரி படத்தின் மூலம் தமிழ் ஆடியன்ஸ்களுக்கு அறிமுகமானவர் நடிகர் பூமிகா. தமிழ் திரைப்பட உலகில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் அவர். ”பத்ரி படத்தில் எனக்கு கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன், சில்லுனு ஒரு காதல் திரைப்படம் எனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. ஜோதிகா தனிப்பட முறையில் எனக்கு நல்ல நட்பானார். திரைப்படம் முடிந்தும் கொஞ்ச நாட்களுக்குத் தொடர்பில் இருந்தோம். சூர்யாவும் அவரைப் போலவேதான். மிகவும் நல்ல மனிதர்கள் இருவரும். சூர்யா-ஜோதிகா திருமணத்துக்கு முன்பு இணைந்து நடித்த படம், எனக்கும் அது திருமணத்துக்கு முந்தைய படம். ஸ்விட்சர்லாந்தில்தான் ’முன்பே வா’ பாடலுக்கான சூட்டிங் நடந்தது. அதனால் எல்லோருமே ஸ்விட்சர்லாந்தில் இருந்தோம். சில மகிழ்ச்சியான தருணங்களும் நிகழ்ந்தன. ” எனப் பகிர்ந்துகொண்ட அவர் முன்பே வா பாடலின் சில வரிகளைப் பாடினார்.
உங்களுக்கு லிப்ஸ்தான் அழகு என்று உங்களது ரசிகர்கள் சொல்லியிருக்கிறார்களா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு,”நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ஆனால் சிறுவயதில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதை நான் யாரிடமும் சொன்னது இல்லை. என்னுடன் விளையாடிக் கொண்டிருந்த சிலர் எனக்கு உதடுகள் குண்டாக இருப்பதாகக் கிண்டல் செய்தார்கள். வீட்டுக்கு அழுதுகொண்டே சென்றேன். கடவுளிடம் ‘என் உதடுகளை ஒல்லியாகச் சொல்லிக் கேட்டேன். ஆனால் அதே உதடுகள்தான் எனக்கு ரசிகர்களைத் தேடித்தரும் என நினைத்துக் கூடப் பார்த்ததில்லை” என்கிறார்.
பூமிகா முதன்முதலில் அறிமுகமான ’தேரே நாம்’ படம் அண்மையில் 19 ஆண்டுகளைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் அவர் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்திருந்தார்.