பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் நிரபராதி என அறிவிக்கப்பட்டது பலருக்கு அதிர்ச்சியளித்தது. நடிகை மஞ்சு வாரியர் உட்பட பிற மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் பாதிக்கப்பட்ட நடிகைக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருவதோடு நீதிமன்றத்தில் உத்தரவை கண்டித்து குரல் கொடுத்து வருகிறார்கள். இப்படியான நிலையில் நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

 நடிகை பாவனா இன்ஸ்டாகிராம் பதிவு

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பாவனா இப்படி பதிவிட்டுள்ளார். " நான் செய்த தவறு என்னவென்றால், எனக்கு எதிராக ஒரு வன்முறை நடந்தபோது, ​​உடனடியாக காவல்துறையில் புகார் அளித்து, சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னேறினேன்! அன்று நடந்த அனைத்தும் விதி என்று கூறி நான் அமைதியாக இருந்திருக்க வேண்டும், பின்னர் வீடியோ வெளிவந்தபோது, ​​காவல்துறையிடம் இதைப் புகாரளிக்கவில்லை என்று என்னைக் குற்றம் சாட்டியவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது குற்றவாளி, விடுவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார்,  உங்களுக்கோ அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கோ, இதுபோன்ற வக்கிரங்களைச் சொல்லி பரப்புபவர்களுக்கோ இந்த நிலைமை ஏற்படக்கூடாது!. நான் பாதிக்கப்பட்டவளும்  அல்ல, பாதிப்பில் இருந்து மீண்டவளும் இல்லை. நான் ஒரு எளிய மனிதி. என்னை வாழ விடுங்கள்" என பாவனா இந்த பதிவில் மனமுடைந்து பேசியுள்ளார்

பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு

நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த வாரம் எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீபிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவரை நிரபராதி என அறிவித்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டது மற்றும் குற்றவாளிகளுக்கு வெறும் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கியதை சமூக அர்வலர்கள் பலரும் விமர்சித்தார்கள். நடிகைக்கு ஆதரவாக நடிகை திலீபின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் , நடிகை பார்வதி திருவொத்து உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள்.