நடிகை பேபி அஞ்சு தன் வாழ்க்கையில் திருமணம் என்னும் பெயரில் நடந்த மிகப்பெரிய மோசடியை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


குழந்தை நட்சத்திரமாக திரைப்படத் துறைக்கு வந்த அஞ்சு தனது இரண்டு வயதில் 1979 ஆம் ஆண்டில் உதிரிப்பூக்கள் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரம், துணை நடிகை கதாபாத்திரம் என நடித்த அவர் சித்தி, சூலம், செல்வி, மேகலா உள்ளிட்ட பிரபல சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது 45 வயதாகும் அவர் 1995 ஆம் ஆண்டு பிரபல நடிகர் டைகர் பிரபாகரனை காதல் திருமணம் செய்தார். இவர் ரஜினி நடித்த முத்து படத்தில் நடிகை மீனாவின் மாமாவாக போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் ஒரே வருடத்தில் பிரபாகரனை விவாகரத்து செய்தார் அஞ்சு. 


இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றின் நேர்காணலில் அவர் தனது திருமணம் என்னும் பெயரில் நடந்த சோக கதையை பகிர்ந்துள்ளார். டைகர் பிரபாகரனை எனக்கு கன்னட படத்தில் நடிக்கும் போது தான் தெரியும். வேறு ஒருவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் கடைசி நேரத்தில் இவர் நடித்தார். பிரபாகரனை திருமணம் செய்யுமாறு கூறிய போது நான் மறுத்து அப்பாவிடம் சொன்னேன். சொல்லப்போனால் அவருக்கு எங்க அப்பாவை விட வயது அதிகம். ஆனால் பரிதாபம் ஏற்படுத்தினார்கள். அதனால்  நடிப்பின்  மீது ஆர்வம் இல்லாததால் திருமணம் செய்ய முடிவெடுத்தேன். எல்லோரும் திட்டினார்கள். கல்யாணம் செய்யும்போது எனக்கு 17 வயது தான். எங்களுக்கு நடந்தது திருமணம் என சொல்ல முடியாது.  ஒன்றரை வருடம் மட்டும் நான் அவருடன் இருந்த நிலையில் முதலில் எனக்கு அவருக்கு ஒரு மகள் இருந்தது மட்டுமே தெரியும்.


வீட்டிற்கு போனால் அங்கே என்னை விட வயதில் மூத்த 2 பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என பிரபாகரனிடம் கேட்டதற்கு என் பிள்ளைகள் என்றார். நான் மனமுடைந்து  விட்டேன். அதைவிட கொடுமை நான் அவருக்கு 4வது மனைவி என தெரிய வந்தது. ஆனாலும் நான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால் சமாளித்து விடலாம் என நினைத்தேன். ஒருநாள் என் தம்பி வந்து என்னை பார்த்து விட்டு வீட்டில் போய் சொல்லி விட்டான்.நான் கர்ப்பமாக இருக்கும் போதே அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் அதிகரித்து வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். சென்னை வந்த என்னை சந்தித்து திரும்பி வருமாறு கூப்பிட்டார். நான் வர மாட்டேன் என தெரிவித்து விட்டேன். 


பின் 2 வருடங்கள் கழித்து பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிய வந்தும் நான் செல்லவில்லை என அஞ்சு தெரிவித்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் உங்கள் கதையைக் கேட்டு வருத்தம் கொள்வதாக தெரிவித்துள்ளனர்