கஜகஸ்தானில் மெய்க்காப்பாளரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவத்தை நடிகை அவிகா கோர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நேர்காணலில் பேசிய அவர், ‘கஜகஸ்தானில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்படி தன்னை யாரோ பின்னால் இருந்து தொட்டது போல் உணர்ந்தேன். திரும்பி பார்த்தால் என்னுடைய பாதுகாவலர் நின்று கொண்டிருந்தார். என்னுடைய பாதுகாவரே இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டார் என்பதை நினைக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.
இது ஒருமுறை மட்டும் நடக்கவில்லை. இரண்டாவது முறையும் யாரோ என்னை தொட முயற்சிப்பது போல் இருந்தது. நான் அதனை தடுத்து நிறுத்தி அந்த கையை பிடித்து என்ன என்று கேட்டேன், அந்த நபர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.
அந்த நபருக்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரியாது என்பதால் நான் அப்படியே விட்டு விட்டேன். என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. பெண்களை கேலி அல்லது துன்புறுத்தல் செய்யும்போது அந்த சூழ்நிலை அவர்களை எப்படி காயப்படுத்தும் என்பது தெரிவதில்லை. எனவே எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும்பாலான விஷயங்களை நீயே கையாள வேண்டும் என அம்மா அறிவுறுத்தினார். அதனால் மேக்கப் செய்யும்போது கூட தேவைப்பட்டால் மட்டுமே யாரையும் தொட அனுமதிப்பேன். இப்போது சூழ்நிலைகள் எல்லாம் மாறிவிட்டது. இதுபோன்ற விஷயங்களை எப்படி சமாளிக்க, கையாள வேண்டும் என எனக்கு தெரியும். என்னால் அவர்கள் இருவரையும் அந்த நேரத்தில் அடித்திருக்க முடியும். ஆனால் சூழ்நிலையால் முடியாமல் போய் விட்டது எனவும் அவிகா கோரி கூறியுள்ளார்.
அவிகா கோரி திரைப்பயணம்
பால்கி வது என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆனந்தி வேடத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார் அவிகா கோர். தொடர்ந்து 2013 இல் உய்யலா ஜம்பாலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். மேலும் பாத்ஷாலா, தேஸ், கஹானி ரப்பர்பேண்ட் கி மற்றும் 1920: ஹாரர்ஸ் ஆஃப் தி ஹார்ட் உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக ப்ளடி இஷ்க் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.