தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர் பாவனா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்று கொச்சின் திரும்பும் வழியில் சிலரால் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் , தான் இந்த சம்பவத்தால் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து நடிகை பாவனா தற்போது மனம் திறந்துள்ளார். அது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாவனா.
"இது எளிதான பயணம் அல்ல, விக்டிமாக இருந்து சர்வைவராக மாறுவதற்கான பயணம். 5 ஆண்டுகளாக, என் பெயரும் எனது அடையாளமும் என் மீது இழைக்கப்பட்ட தாக்குதலின் பாரத்தில் அடக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தது நான் இல்லை என்றாலும். குற்றம் செய்தேன் என அடையாளப்படுத்தப்படுகிறேன். என்னை அவமானப்படுத்தவும், மௌனப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்துள்ளன.ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் என் குரலை உயிர்ப்பிக்க சிலர் முன்வந்திருக்கிறார்கள்.இப்போது பல குரல்கள் எனக்காக பேசுவதைக் கேட்கும்போது நீதிக்கான இந்த போராட்டத்தில் நான் மட்டும் இல்லை என்பது புரிகிறது. நீதி நிலைபெறவும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவும், வேறு யாரும் இதுபோன்ற நிலைக்கு ஆளாகாமல் இருக்கவும், இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன். என்னுடன் நிற்கும் அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்கள் அன்புக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.