எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் மலபார் என செல்லமாக அழைக்கப்பட்ட அசின் அஜித், விஜய், விக்ரம், கமல், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.


இவரின் நடிப்பில் வெளியான கஜினி, போக்கிரி, சிவகாசி, வரலாறு, தசாவதாரம் போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்த அசின். பின்னர் பாலிவுட் பக்கம் கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் ஜோடியாக என்ட்ரி கொடுத்து ஒரே படத்தில் உச்சகட்ட நட்சத்திரமாக பிரபலமானார். 


 



சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை :


திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வந்த நடிகை அசின் மைக்ரோ மேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை காதல் திருமணம் செய்து கொண்டார்; இந்த தம்பதியினருக்கு அரின் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு பை பை சொன்ன அசின், கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்; சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருந்து வரும் நடிகை அசின் அவ்வப்போது குழந்தையின் புகைப்படங்களை போஸ்ட் செய்வது வழக்கம். 


 







ஐந்து வயதாகும் அசின் மகளின் கியூட் போட்டோஸ் :


அந்த வகையில் ஐந்து வயதாகும் மகளின் புகைப்படங்களை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார் அசின்; அரின் ஐந்தாவது பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்த அசின் அதில் " அவள் எங்கள் வாழ்க்கையின் ஒளி. இன்று அவளின் பிறந்தநாள்! ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரின்! நாங்கள் உன்னை அளவுகடந்து நேசிக்கிறோம். ஒளிமயம் மிகுந்த உன்னுடைய முகம், அன்பான இதயம், அழகான சிரிப்பு, க்யூட்டான நடனம், நகைச்சுவையான பேச்சு என் நீ வளர்வதை பார்க்க மிகவும் விரும்புகிறோம்" என குறிப்பையும் பதிவிட்டுள்ளார் அசின். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள் அசின் ரசிகர்கள். ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து அசின் விலகியிருந்தாலும் மீண்டும் அவரை திரையில் ஒரு நடிகையாக பார்க்க அவரின் ரசிகர்கள் ஏங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.