தனது 47 வயது அம்மாக்கு தற்போது அழகான குழந்தை பிறந்துள்ளதாக மலையாள நடிகை ஆர்யா பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


கேரள டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருவபவர் ஆர்யா பார்வதி. இவர் அந்த துறையில் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். மலையாளத்தில் உள்ள ஏசியாநெட்டில் செப்பாட்டு என்னும் தொடரில் ஆர்யா பார்வதி மிகவும் பிரபலம்.  இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே மோகினி ஆட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் டெலிவிஷன் தொடர்களில் வாய்ப்பு கிடைத்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். 


இன்ஸ்டா பதிவு:


இந்தநிலையில், தனது 47 வயது அம்மாக்கு தற்போது அழகான குழந்தை பிறந்துள்ளதாக ஆர்யா பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், “ஒரு தொலைபேசி அழைப்பு என் வாழ்க்கையை மாற்றியது. போன வருஷம், நான் விடுமுறைக்கு ஊருக்குச் செல்வதற்குச் சில நாட்களுக்கு முன், அப்பாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் அப்போது பதட்டமாக இருந்தார்.  சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் சொன்னார், ‘𝗔𝗺𝗺𝗮 𝗶𝘀 𝗽𝗿𝗲𝗴𝗻𝗮𝗻𝘁.’ அப்போது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை… நான் அதிர்ச்சியடைந்தேன். அம்மாக்கு 47 வயது. இது வித்தியாசமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் அப்பா என்னிடம் சொன்னபோது, அம்மா ஏற்கனவே 8வது மாதத்தில் இருந்தார். உண்மையில், அப்பா இதை கண்டுபிடிக்கும்போது அம்மா 7 மாதங்கள் கர்ப்பமாக இருந்தார். 


உங்களுக்குத் தெரியும், என் குழந்தைப் பருவம் முழுவதும், நான் அம்மாவிடம், ‘எனக்கு ஒரு உடன்பிறப்பு வேண்டும்!’ என்று சொல்வேன், ஆனால் நான் பிறந்த பிறகு, அவளது கருப்பையில் சில பிரச்சனைகள் இருந்ததால், அவளால் இனி ஒருபோதும் கருத்தரிக்க முடியாது என்று அம்மா என்னிடம் கூறினார். எனவே, அதே வாழ்க்கை தொடர்ந்தது.


 அம்மாவும் அப்பாவும் கேரளாவில் தங்கியிருந்தபோது, நான் பெங்களூருக்கு கல்லூரிக்கு சென்றேன். அப்பா இந்த செய்தியை சொன்ன பிறகு, நான் எப்படி நடந்துகொள்வேன் என்று தெரியாததால் அதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்றார். சில நாட்களுக்குப் பிறகு, நான் வீட்டிற்கு வந்ததும், அம்மாவின் மடியில் விழுந்து அழ ஆரம்பித்தேன். நான் சொன்னேன், ‘நான் எதற்காக வெட்கப்பட வேண்டும்?’ எனக்கு இது ரொம்ப நாளா ஆசையா இருந்தது.


அதன் பிறகு, அம்மாவும் நானும் ஒன்றாக நேரத்தை செலவிட ஆரம்பித்தோம். அப்போதுதான், அம்மாவும் அப்பாவும் ஒரு கோவிலுக்குச் சென்றபோது எப்படி தான் கர்ப்பமாக இருந்த்தை கண்டுபிடித்தாள் என்று என்னிடம் சொன்னார், திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. மருத்துவமனையில், மருத்துவர்கள் அம்மாவை சோதனை செய்தபோது நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 


மெதுவாக, நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் சொல்ல ஆரம்பித்தோம். சிலர் கவலை பட்டனர். சிலர் பாராட்டினர். சிலர் கேலி செய்தனர். ஆனால் நாங்கள் இதை கண்டு கொள்ளவில்லை.  அதனால்தான் அம்மாவின் கர்ப்பம் சீராக சென்றது; எந்தவொரு மன அழுத்தமும் இல்லாமல் இருந்தது. 


கடந்த வாரம் அம்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை என்னை ‘அக்கா!’ என்று அழைப்பதற்காக என்னால் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.