நடிகை அபர்ணா தாஸ் (Aparna Das) திருமணம் நாளை நடக்கவுள்ள நிலையில், திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அப்படத்தில் 2வது ஹீரோயினாக நடித்திருந்தாலும் வசீகரமான அழகால் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்றார். இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் ஹீரோயினாக நடித்தார். எதார்த்தமான நடிப்பு மற்றும் படத்தின் வெற்றி என இரண்டுமே அபர்ணா தாஸூக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது.
தமிழுக்கு வருவதற்கு முன்பே 2018 ஆம் ஆண்டு வெளியான நஞ்சன் பிரகாஷன் படம் மூலம் அபர்ணா தாஸ் மலையாள திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் மனோஹரம் படம் மூலம் பிரபலமானார். தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் படங்களில் நடித்தார். இப்படி 3 மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வரும் அபர்ணா தாஸூக்கு திருமணம் ஆக போகிறது என்ற தகவல் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியானது.
28 வயதான அவருக்கும், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ்நாட்டின் ரசிகர்களிடையே பிரபலமான தீபக் பரம்போலுக்கு தான் திருமணம் நடக்கவுள்ளது. மனோஹரம் படத்தில் தீபக் மற்றும் அபர்ணா தாஸ் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர்.
இருவருக்கும் நாளை (ஏப்ரல் 24) கேரளாவில் உள்ள வடக்கஞ்சேரியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கவுள்ளது. இப்படியான நிலையில் திருமணத்துக்கு முந்தைய நலங்கு கொண்டாட்டங்கள் அபர்ணா தாஸ் வீட்டில் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் இருவருக்கும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Watch video: த்ரெடிங், வாக்சிங் எல்லாம் பண்ணிக்கிட்டேன்! அடிக்காத லூட்டியே இல்லை: ஆணழகன் பிரஷாந்த் பகிர்ந்த சீக்ரெட்