'சிவா மனசுல சக்தி' படத்தில் சக்தியாக சிவாவை சுத்த விட்ட நடிகை அனுயாவை அவ்வளவு எளிதில் தமிழ் ரசிகர்களால் கடந்து விட முடியாது. 2007ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 'மஹேக்' என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை அனுயா. அதை தொடர்ந்து 2009ம் ஆண்டு அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்புதான் தமிழ் சினிமாவில் 'சிவா மனசுல சக்தி' திரைப்படம். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தனது துறுதுறுப்பான நடிப்பால் யாருடா இந்த பொண்ணு என இளவட்ட ஆண்களை வட்டமிட வைத்தது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். 



குறைந்த பட வாய்ப்புகள் :


யுரேகா இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டில் மதுரையின் பின்னணியில் உருவான 'மதுரை சம்பவம்' படம் அனுயாவிற்கு பாராட்டை பெற்று கொடுத்தது. 'நஞ்சுபுரம்' என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய அனுயா இனிமேல் இது போல நடிக்க மாட்டேன் என்பதையும் தெளிவாக சொல்லிவிட்டார். 'நண்பன்' படத்தில் ஹீரோயின் இலியானாவின் அக்காவாக நடித்திருந்தார். 'நான்' படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதனை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகினார். 


பிக்பாஸ் வாய்ப்பு : 


பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த அனுயாவிற்கு தமிழ் சரளமாக பேச முடியாத காரணத்தால் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுடன் சகஜமாக பழக முடியாமல் போனது. முதல் போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் அனுயா. 



வீடியோ போஸ்ட் :


அனுயா பல பிரபலங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் என எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். "நான் துபாயில் பிறந்த வளர்ந்தவள். எனக்கு தமிழ் கொஞ்சமாக தான் தெரியும். என்னுடைய அப்பாவும் அம்மாவும் மருத்துவராக இருந்து வருகிறார்கள். என்னுடைய அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறார். நான் புனேவில் பொறியியல் பட்டம் பெற்றேன். பிறகு சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். நான் விஜய் ஆண்டனி, ஜீவா, சுந்தர்.சி, ஹரிகுமார்  உள்ளிட்டோருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறேன் என எழும் வதந்திகள் அனைத்தும் உண்மையல்ல. நான் இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறேன். என்னிடம் கேட்க ஏதாவது கேள்விகள் இருந்தால் நீங்கள்  என்னிடம் கேட்கலாம்" என பேசி இருந்தார் அனுயா. 


 






ரசிகர்களின் கேள்வி :


அனுயாவின் இந்த வீடியோ போஸ்டுக்கு ரசிகர்கள் கமெண்ட் மூலம் பல கேள்விகளை கேட்டு இருந்தனர். அதில் ஒருவர் "நீங்கள் என் தனியாக இருக்கிறீர்கள்? திருமணம் செய்து கொள்ளலாமே?" என கேள்விகளை கேட்டு இருந்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அனுயா "என்னை சுற்றி இருக்கும் ஆண்கள் யாரும் நல்லவர்கள் இல்லை" என பதிலளித்து இருந்தார்.