Anupama Parameswaran: அனுபமாவை பேசவிடாமல் ரசிகர்கள் செய்த செயல்.. தில்லு ஸ்கொயர் பட விழாவில் பரபரப்பு!
Actress Anupama: தில்லு ஸ்கொயர்’ படத்தின் வெற்றி விழாவில் நடிகை அனுபமா பரவேஷ்வரன் ரசிகர்களால் உதாசீனப்படுத்தப் பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனுபமா பரமேஷ்வரன்
பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஷ்வரன். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்குவில் அவர் நடித்துள்ள படம் தில்லு ஸ்கொயர். மலிக் ராம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டி.ஜே தில்லு என்கிறப் படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகி இருக்கும் படம் தில்லு ஸ்கொயர். சித்து, அனுபமா பரவேஸ்வரன் ஆகிய இருவர் இணைந்து நடித்துள்ள இப்படம் கடந்த மார்ச் 29ஆம் தேதி வெளியானது.
பிரேமம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த அனுபமா பரமேஷ்வரன்இப்படத்தில் பயங்கர ரொமாண்டிக்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற வெளிப்படையான முத்தக் காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது. தெலுங்கு சினிமாவில் வெளியான பிற படங்கள் பெரியளவில் வரவேற்பைப் பெறாத நிலையில், இப்படம் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய தெலுங்கு படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது இப்படம்.
Just In




விமர்சனங்களை சந்திக்கும் அனுபமா
ஒரு பக்கம் படம் வெற்றிபெற்றாலும் மறுபக்கம் நடிகை அனுபமா சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேறு ஒரு டிராக்கில் அவர் சென்றுள்ளதாக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தில்லு ஸ்கொயர் படத்தின் வெற்றியை கொண்டாட சமீபத்தில் பிரம்மாண்டமாக வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர், மற்றும் இயக்குநர் திரி விக்ரம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வில் நடிகை அனுபமா மேடையில் பேசத் தொடங்கியபோது ரசிகர்கள் கூச்சலிட்டு அவரை பேசவிடாமல் ஆரவாரம் செய்தார்கள். ரசிகர்கள் தொடர்ச்சியாக சத்தம் எழுப்பியபடியே இருந்த காரணத்தினால் அனுபமா பேசுவது தடைபட்டது. உடனே அவர் ரசிகர்களைப் பார்த்து ”இப்போ நான் பேசட்டுமா, இல்ல அப்டியே போகட்டுமா?” என்று ஜாலியாக கேட்க” ரசிகர்கள் பேசவேண்டாம் போங்க” என்று சத்தம் போடத் தொடங்கினார்கள். இதனை சற்றும் எதிர்பார்க்காத அனுபமா தன்னால் முடிந்த மட்டும் சூழ்நிலையை பாசிட்டிவாக எதிர்கொள்ள முயற்சி செய்தார். ரசிகர்களின் சத்தத்திற்கு மத்தியில் அவர் பேசத் தொடங்கினார்.
இந்த சம்பவம் அனுபமாவை ரசிகர்கள் வேண்டுமென்று அவமரியாதைக்கு உள்ளாக்கியதாக பல்வேறு கருத்துக்கள் எழுந்து வருகின்றன. அதே நேரம் இப்படியான சூழலை நடிகை அனுபமா எதிர்கொண்ட விதம் அனைவரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.