மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசித் தேதி ஆகும். பலமுறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், கடைசியாக மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.


2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?


* முதல்முறை விண்ணப்பிக்கும் மாணவர்கள், தேவையான தகவல்களை முன்பதிவு  செய்துகொள்ள வேண்டும். அதற்கு https://neet.ntaonline.in/frontend/web/registration/index என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.


* சரியான இ- மெயில் முகவரி, தொலைபேசி எண்ணை மட்டுமே உள்ளிட வேண்டும்.
* முன்பதிவு படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
* விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, கைரேகை ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
* முதல் இரண்டு படிவங்களையும் பூர்த்தி செய்த பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதன்பிறகே விண்ணப்பப் படிவம் உறுதிசெய்ய வேண்டும். சரியான தகவல்களை மட்டுமே தேர்வர்கள் உள்ளிட வேண்டும்.


கடைசியாக வழங்கப்பட்ட வாய்ப்பு


 மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு ஏற்ப ஒரேயொரு வாய்ப்பாக, நீட் விண்ணப்பப் பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. மாணவர்கள் இன்று (ஏப்ரல் 10ஆம் தேதி) இரவு 10.50 வரை விண்ணப்பிக்கலாம் எனவும், நள்ளிரவு 11.50 மணி வரை மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
என்னென்ன ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்?


* ஆதார் அட்டை
* டிஜி லாக்கர்
* ஏபிசி ஐடி
* பாஸ்போர்ட்
* பான் கார்டு
* பள்ளி அளவிலான அடையாள அட்டை


 


பிப்ரவரி 9ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் கடைசி முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் இன்று (ஏப்.10) இரவு 10.50 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 10ஆம் தேதி நள்ளிரவு 11.50 மணி வரை மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf என்ற தகவல் வழிகாட்டியைக் காணலாம்.


தொடர்புகொள்ள- தொலைபேசி எண்: +91-11-40759000
கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/