Anjali: விவாகரத்து பெற்ற தயாரிப்பாளருடன் அஞ்சலி திருமணமா? வைரலாக பரவும் தகவல் உண்மையா? 

Anajali: நடிகை அஞ்சலி விரைவில் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் இயக்குநர் ராம் தன்னுடைய படைப்பு ஒவ்வொன்றையும் மிகவும் நேர்த்தியாக செதுக்கி தரமாக கொடுப்பதில் வல்லவர். அவரின் வித்தியாசமான திரைக்கதை ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Continues below advertisement

அந்த வகையில் அவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான 'கற்றது தமிழ்' திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்த அஞ்சலிக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிந்தன.  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிபடங்களிலும் பிஸியாக நடித்து வந்தார். 

 

 

தமிழில் அஞ்சலி நடித்த அங்காடி தெரு படத்திற்காக ஏராளமான விருதுகளை குவித்தார். அதை தொடர்ந்து மங்காத்தா, எங்கேயும் எப்போதும், சேட்டை, கலகலப்பு, வத்திக்குச்சி, இறைவி, தூங்காநகரம், பலூன், பேரன்பு, பாவக்கதைகள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் வெரைட்டியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தார். 

காதல் கிசுகிசு :

திரைத்துறையை சேர்ந்தவர்கள் கிசுகிசுவில் சிக்குவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் நடிகை அஞ்சலியும் காதல் கிசுகிசுவில் சிக்கி கொண்டார். பலூன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நடிகர் ஜெய்யை அஞ்சலி காதலிக்கிறார் என பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் எழுந்தன. மேலும் பல காரணங்களால் சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருந்தார் அஞ்சலி.

 

   

அஞ்சலி ரீ என்ட்ரி :

தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கிய அஞ்சலி 'ஃபால்' என்ற வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஒரு சில திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடினார். தற்போது இயக்குநர் ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது. 'கற்றது தமிழ்' படம் போல 'ஏழு கடல் ஏழு மலை' படமும் அஞ்சலிக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் படமாக அமையும் என மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். 

விரைவில் திருமணம் :

இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாத அஞ்சலியின் திருமணம் குறித்த தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. திரைப்பட விழா ஒன்றில் சந்தித்ததன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

Continues below advertisement
Sponsored Links by Taboola