கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்துவரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கொரோனா தொற்றால் திரைப்பட பிரபலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலர் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்கள். நடிகர் நடிகைகள் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவர்களிடம் உரையாடுவது போன்ற செய்திகள் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் அதிகம் காணப்படும் ஒரு செய்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் , விஜய் டிவி புகழ் டிடி தனது முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக் கொண்டார் . அதை பற்றி அவர் கூறுகையில் "ரொம்ப பயந்தேன் !ரொம்ப யோசிச்சேன் ! நான் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்திக்காக வேறு சில மருந்துகளை எடுத்துக்கொண்டு இருக்கிறேன் . எனது மருத்துவரிடம் கேட்டபொழுது ,மற்ற மருந்துக்களை நிறுத்திவிட்டு முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் அதுதான் நம்மை இப்போ கொரோனாவில் இருந்து காப்பாத்தமுடியும்னு சொன்னார். நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றுவதற்காக கோவிஷீல்ட் போட்டுக்கொண்டேன். மருத்துவர் கார்த்திகா கார்த்திக்குக்கு மிகப்பெரிய நன்றி. சரியான சமயத்தில என்னோட சந்தேகங்களுக்கு பதில் சொல்லி என்னை தெளிவுபடுத்துனதுக்கு. கண்டிப்பா உங்க மருத்துவர் பரிந்துரையின் படி தடுப்பூசி போட்டுக்கோங்க” என்று பதிவிட்டிருக்கிறார்.
நான் பதிவு செய்து எனது தடுப்பூசியை போட்டுக்கொண்டேன். எனக்கு உதவி புரிந்த மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு எனது நன்றி" என்று பதிவிட்டு இருந்தார். மருத்துவர் கார்த்திகா கார்த்திக் நடிகர் தனுஷின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது . இவர் கொரோனா பற்றிய பல குறிப்புக்கள் மற்றும் சந்தேகங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் .பல நடிகர் நடிகைகளும் அவரிடம் தங்களது சந்தேகங்களை கமெண்ட்டுகளில் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்.