அனசுயா பரத்வாஜ்:


எம்பிஏ படித்த புஷ்பா 2 பட நடிகை அனசுயா பரத்வாஜ் ,ஆரம்பத்தில் HR ஆக பணியாடியவர்.  சினிமா பட வாய்ப்புகள் தேடியபோது இவரின் முகம் மிகவும் முதிர்ச்சியான இருப்பதாக பலர் நிராகரித்தனர். அனசுயா சாக்‌ஷி டிவியில் செய்தி வாசிப்பாளராக மாறினார். அந்த அனுபவத்தை கொண்டு பிரபல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 


சில திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றியுள்ள அனசுயா,  இதையடுத்து வந்த சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கினார். 2013 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலும் சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். கவர்ச்சியான வேதங்களாக இருந்தாலும், அதில் துணிந்து நடிப்பவர் அனசுயா.  தெலுங்கில் மட்டுமே நன்கு பிரபலமான இவரை பான் இந்தியா நடிகையாக மாற்றியது, 'புஷ்பா' திரைப்படம் தான்.




புஷ்பா படத்தில் வில்லியாக நடித்துள்ளார் அனசுயா. அதே ரோலில் தான் புஷ்பா 2 படத்திலும் கலக்கியிருப்பார்.  எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனசுயா, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அந்நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டியில் தன்னுடைய கணவர் 3ஆவது குழந்தைக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று ஓபனாக பேசியிருக்கிறார் அனசுயா.


கடந்த 2010 ஆம் ஆண்டு சுசாங்க் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனசுயாவுக்கு 39 வயதிலே  2 குழந்தைகள் உள்ளனர். எனினும் அனசுயாவிற்கு பெண்  குழந்தைகள் என்றால் ரொம்பவே பிரியமாம். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறக்கும் போது, பெண் குழந்தையாக பிறக்க வேண்டும் என ஆசை பட்ட இவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.




3ஆவது குழந்தை:


எனவே எப்படியும் பெண் குழந்தை பெற்று கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அனசுயா இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அதற்கான முயற்சியில் ஈடுபட தான் தயாராக இருந்தாலும் கணவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என கூறி ஷாக் கொடுத்துள்ளார். அதாவது தன்னுடைய கணவர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவதாக தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் அனசுயா ஆசை கூடிய விரைவில் நிறைவேற வேண்டும் என தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.