இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள நடிகை எமி ஜாக்சன், “ வனவிலங்குகள் ஏன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்கும், பொழுதுபோக்கிற்காக ஏன் அவற்றை நாம் கட்டிவைக்ககூடாது என்பதற்கும் அண்மையில் கிடைத்த உதாரணம்தான் இந்த வீடியோ. அந்த யானை வனத்தில் தனது குடும்பத்துடன் இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு மாறாக யானை அடிமையாகவும், சுற்றுலாவிற்கு வரும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காகவும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதனால் யானை கோபமடைவதில் ஆச்சரியமில்லை. இந்தத் தகவலை உங்களது ஃபாலோயர்ஸ், குடும்பத்தினர், ஊடகவியலாளர்கள், யார் இதை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். அதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்தி, காட்டுமிராண்டித்தனமான மிருக கொடுமையை தடுத்து நிறுத்துங்கள்.
நாம் ஒன்றிணைந்து அனைவருக்கும் ஒன்றை நினைவுப்படுத்த வேண்டும். இந்த விலங்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால், உயிருள்ள விலங்குகளை தங்கள் செயல்களில் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்ச்சிகளுக்கும் அல்லது சர்க்கஸ்களுக்கும் பணம் செலுத்த வேண்டாம்.
விலங்குகள் சிறப்பாக செயல்படத் தகுதியானவை!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்தவர். அதனைத் தொடர்ந்து, விக்ரமுடன் தாண்டவன், ஐ, தனுஷூடன் தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வந்தார். இதனையடுத்து அவருக்கு விஜயுடன் தெறி படத்திலும், ரஜினி நடித்த 2.O படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இது மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த போதே தொழில் அதிபர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் காதல் வயப்பட்டு நெருங்கி பழகினர். இதில் எமிஜாக்சன் கர்ப்பமானார். இதையடுத்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 2019-ல் எமிஜாக்சனுக்கு ஆனட்ரியேஸ் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜார்ஜ் பனயிட்டோவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கினார். இதனால் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. 'சூப்பர் கேர்ள்' என்கிற வெப் சீரிஸில் நடித்தது இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.