இரண்டாவது குழந்தைக்கு தாயான எமி ஜாக்ஸன்...இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அழகிய புகைப்படங்கள்

நடிகை எமி ஜாக்ஸனுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்

Continues below advertisement

எமி ஜாக்ஸன்

மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்து வந்த எமி கடந்த 2019 ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த ஜார்ஜ் என்பவருடன் நிச்சயம்  செய்துகொண்டார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த சமயத்தில்  இந்த ஜோடிக்கு  அதே ஆண்டின் இருதியில் ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து எமி மற்றும் ஜார்ஜ் தங்களது உறவை முடித்துக்கொண்டார்கள். இருவரின் பிரிவு தொடர்பான எந்த வித தெளிவான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

Continues below advertisement

சில காலத்திற்கு பிறகு எமி ஜாக்சன் புகழ்பெற்ற ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகரான எட் வெஸ்ட் விக்  என்பவரை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து எமி ஜாக்சன் மீது பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டன. ஆனால் எந்த காரணத்திற்காகவும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்துவைக்கவில்லை எமி ஜாக்சன்.

இரண்டாவது மகனுக்கு தாயான எமி ஜாக்ஸன்

எமி ஜாக்ஸன் மற்றும் எட் வெஸ்ட்விக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்தைத் தொடர்ந்து எமி கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். சமீபத்தில் தனது மகன் மற்றும் கணவருடன் எமி ஜாக்ஸன் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ வைரலானது. இந்நிலையில் தனக்கு மகன் பிறந்துள்ளதை அறிவித்துள்ளார் எமி ஜாக்சன். ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என தனது மகனின் பெயரையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola