தான் பள்ளியில் படிக்கும்போது காதல் செய்து வீட்டில் மாட்டிக் கொண்டதாக நடிகை அம்மு அபிராமி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


விஜய் நடித்த பைரவா படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தாலும் 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அபிராமி. அந்த படத்தில் ‘அம்மு’ என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் “அம்மு” அபிராமியாகவே அழைக்கப்பட்டு வருகிறார். தொடர்ந்து அசுரன், துப்பாக்கி முனை, யானை, தண்டட்டி, பாபா பிளாக்‌ஷீப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 


தற்போது அம்மு அபிராமி நடிப்பில் “கண்ணகி” படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்த அவர் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்ததாக அவர் நடிப்பில் ஜிகிரி தோஸ்து படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் அம்மு அபிராமி தனது வாழ்க்கையில் நடந்த வேடிக்கையான நிகழ்வுகளை பற்றி பேசியுள்ளார். 


அதில், “நான் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை வேறு வேறு என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒரு நடிகையாக என்னுடைய கேரக்டரை வைத்துதான் உங்களை மகிழ்விக்க முடியுமே தவிர, என்னோட வாழ்க்கையை வச்சி பண்ண முடியாது. எந்தெந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டும், வேண்டாம் என்ற லிமிட் எனக்கு தெரியும். எனக்கான தனிப்பட்ட வாழ்க்கையை நான் அழகாக வாழ்ந்து தான் வருகிறேன். 






ஒருத்தர் என்னிடம் நடந்து கொள்வதை பொறுத்து தான் என்னுடைய அணுகுமுறை என்பது இருக்கும். எல்லோரையும் நம்மளை பிடிக்க வைக்க முடியாது இல்லையா?. பெண்ணாக என்னை நான் காத்துக்கொள்ள ஒரு லிமிட் வைத்து தான் பேச முடியும். ஆனால் வெளியில் அந்த பொண்ணு திமிர் பிடிச்சதுன்னு தான் சொல்வாங்க. 


அப்போது அவரிடம், பெற்றோரிடம் மறைத்த விஷயம் ஏதாவது இருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘ஸ்கூல் டைம்ல அந்த குழந்தைத்தனமான லவ் எல்லாம் பண்ணி மறைச்சிருக்கிறேன். அப்புறம் மாட்டிகிட்டு அசிங்கப்பட்டிருக்கேன். ஒன் சைடா தான் லவ் பண்ணேன். வீட்டுல செம அடி.  10 ஆம் வகுப்பு படிக்கும் போது இதெல்லாம் உனக்கு தேவையா?ன்னு கேட்டாங்க. அதெல்லாம் ரொம்ப க்யூட்டான மொமண்ட்ஸ் தான். ஏனென்றால் எங்க வீட்டுல எனக்கு ரொம்ப சப்போர்ட் தான். நாளைக்கு போய் நான் இவனைத்தான் லவ் பண்றேன்னு கூட சொல்லலாம்” என அம்மு அபிராமி தெரிவித்துள்ளார்.