ஆர்ஆர்ஆர் படத்தின் ஒரு காட்சியில் ஜூனியர் என்டிஆர் கீழே குனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சியால் கால்கள் புண் ஏற்பட்டு விட்டதாகவும், இப்படி தன்னுடைய படத்திற்காக கடுமையாக உழைக்கும் நபர் என ஆலியா பட் தெரிவித்துள்ளார்.
பாகுபலி 2 படத்திற்கு அடுத்ததாக ஆர்ஆர்ஆர் ( இரத்தம், ரணம், ரௌத்திரம்) என்ற படத்தை எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிவந்த நிலையில், வருகின்றமார்ச் 25 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் இதர மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தன்யாவின் டிவிவி என்டெர்யிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. முதல் முறையாக ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடிக்கும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக ஒவ்வொரு ஆக்டர்சும் கடுமையாக உடல் உழைப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக இப்படமானது அல்லுரி சீதா ராமராஜு, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப்போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து எடுகப்பட்டுள்ள படம் என்பதால் அதற்கேற்றால் போல் ஒவ்வொரு நாயகர்களும் தங்களது திறமையை திறம்பட வெளிப்படுத்தியுள்ளனர். பாகுபலி போன்று இப்படமும் ரசிர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான், RRR படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக இருக்கும் ஆலியா பட், சீதாவாக நடித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அதில், "நான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கிய அம்சங்கள் உள்ளன எனவும் சீதாவின் கதாபாத்திரத்தில், நான் அமைதியையும் வலிமையையும் உணர்ந்தேன் என சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் கடுமையான உடல் உழைப்பை செலுத்தி இருக்கிறார்கள் என தெரிவிக்கும் ஆலியா பட், சுவாரஸ்சியமான நிகழ்வு ஒன்றினையும் பதிவு செய்தார். அதில், ஆர்ஆர்ஆர் படத்தின் ஒரு காட்சியில் ஜூனியர் என்டிஆர் கீழை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இப்படத்திற்காக கடுமையாக கால்களுக்கு உடற்பயிற்சி எடுத்துக்கொண்டதால் அவரது காலில் புண்கள் ஏற்பட்டதாகவும், இப்படி தன்னுடைய படத்திற்காக கடுமையாக உழைக்கும் நபர் என்று புகழாரம் பாடியுள்ளார்.
இதனையடுத்து ஜுனியர் என்.டி.ஆர் பேசுகையில், சில இயக்குநர்கள் 99 சதவீதம் நடிப்பு இருந்தால் போதும் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் பார்த்த இயக்குநர்களிலேயே 100 சதவீதம் ரிசல்ஸ்ட் போதும் என்று கூறும் இயக்குநர் ராஜ மௌலி தான் என பெருமையுடன் கூறுகிறார். இதனால் தான் ஒவ்வொரு நிகழ்வுகளும் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள மிகப்பிரம்மாண்ட இப்படம் ரசிர்களின் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.