அலியா பட்
மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் சமீபத்தில் தனக்கு ஏ.டி.எச்.டி பாதிப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது பாலிவுட் நடிகை அலியா பட் தனக்கு ஏ.டி.எச்.டி பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியில் ஹைவே , கங்குபாய் , உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அலியா பட்
நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ராஹா என்கிற மகள் உள்ளார். தற்போது அவர் நடித்துள்ள ஜிக்ரா திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
தனக்கு ஏ.டி.எச்.டி இருப்பது தெரியவந்தபோது தனது நண்பர்களிடம் இதை பற்றி தெரிவித்ததாகவும் அவர் இது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்பது போல் ரியாக்ட் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு நீண்ட காலமாகவே இந்த பாதிப்பு இருந்துள்ளதாகவும் ஆனால் தான் அதைப் பற்றி பெரிதாக கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்தார்.
சிறு வயதில் இருந்தே பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று அமைதியாக தன்னை மறந்து ஏதோ ஒரு நினைவுக்கு போய்விடும் பழக்கம் தனக்கு இருந்தது. ஆனால் கேமரா முன் நடிக்கும்போதும் தன மகள் ராஹாவுடன் நேரம் செலவிடும்போது மட்டும் தனது மனம் அமைதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
ஏ.டி.எச்.டி (ADHD)
ADHD என்பதன் முழு விரிவாக்கம் Attention deficit/hyperactivity disorder. வெகுஜன பரப்பில் இது ஒரு நோய் என்று அறியப்பட்டாலும் உண்மையில் ஏ.டி.எச்.டி என்பது ஒரு மூளையின் நரம்புகளில் ஏற்படும் ஒரு மாற்றமே, குறைபாடே ஆகும். இந்த நரம்பியல் மாற்றத்திற்கு உள்ளானவர்களால் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது. எளிதில் திசைதிரும்பக் கூடிய தன்மையுடையவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
அதிக சுட்டித்தனம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை, அவசர குணம் போன்ற பொதுவான அறிகுறிகளை இந்த நிலையால் பாதிக்கப்பட்டவர்களில் பார்க்கலாம்.
இந்த நிலை இருப்பதை குழந்தை பருவத்திலேயே அடையாளம் கண்டுகொண்டால் பயிற்சிகளின் உதவியுடம் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் ஞாபக மறதி, அன்றாட வேலைகளை செய்வதில் சிரமப்படுபவர்களாக இருப்பார்கள்.
நம்மைச் சுற்றி இருக்கும் பல பிரபலங்கள் இந்த நரம்பியல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களே. 28 முறை ஒலிம்பிக்ஸின் பதக்கம் வென்ற மைக் ஃபெல்ப்ஸ், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் , ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் உள்ளிட்டவர்களை உதாரணமாக குறிப்பிடலாம்.