Alia Bhatt Allu Arjun: கங்குபாய்க்கு வாழ்த்து சொன்ன புஷ்பராஜ்... மாறி மாறி பாராட்டிக் கொண்ட அல்லு அர்ஜூன் - அலியா பட்!

சிறந்த நடிகைக்கான விருதை அலியா ஒருபக்கம் தட்டிச்செல்ல, மறுபக்கம் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் வென்றார்.

Continues below advertisement

சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை அலியா பட் வென்றதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வாழ்த்து  தெரிவித்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பதில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அலியா பட்.

Continues below advertisement

 

விருது வென்ற கங்குபாய்

2022ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த கங்குபாய் கத்தியவாடி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அலியா பட்டிற்கு கொடுக்கப்பட்டது. மும்பையைச் சேர்ந்த பாலியல் தொழிலாளியாக இருந்த கங்குபாய் கத்தியவாடியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட உண்மை கதையில் கங்குபாயாக பாலிவுட் நடிகை அலியா பட் நடித்திருந்தார்.

பாலியல் தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி மும்பையையே ஆட்டிப்படைத்த மிகப்பெரிய அரசியல் தலைவராக மாறிய கங்குபாயின் லட்சியக் கதையில், அலியா பட் நடிப்பில் அசத்தி இருப்பார். 20 வயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் அலியா பட், தன்னை எப்படி அரசியல் தலைவராக மாற்றி கொண்டார் என்பதே கதையின் கிளைமாக்ஸாக இருக்கும்.

இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அலியா பட்டுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் அலியா பட்டிற்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் அலியா பட்டை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

விருது வென்ற புஷ்பராஜ்

சிறந்த நடிகைக்கான விருதை அலியா ஒருபக்கம் தட்டிச்செல்ல, மறுபக்கம் சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் வென்றார். தேசிய விருது வெல்லும் முதல் தெலுங்கு நடிகருக்கான பெருமைக் குரியவராகி இருக்கிறார் அல்லு அர்ஜுன்.

இதனை கோலாகலமாக கொண்டாடி வருகிறது தெலுங்கு சினிமா. இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அல்லு அர்ஜுனுக்கு பதிலுக்கு அவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் அலியா பட்.

Continues below advertisement
Sponsored Links by Taboola