சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை அக்ஷரா ரெட்டி தெரிவித்துள்ளார். பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான அவர் தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக உள்ள பிக்பாஸின் 5வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அக்ஷரா ரெட்டி. சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு ஜார்ஜியாவில் கல்லூரி படிப்பை முடித்தார். மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அக்ஷரா ரெட்டி 2019ம் ஆண்டு மிஸ் சூப்பர் குளோப் இந்தியா என்ற விருதை வென்று அசத்தினார். இந்த போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட நிலையில் இவர் டைட்டில் வென்றார்.
இப்படியான நிலையில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடிய அக்ஷரா ரெட்டி கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு திறமை வாய்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சி அக்ஷராவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது.
சினிமா எண்ட்ரீ
இதனிடையே கன்னடத்தில் ஏற்கனவே பில்கேட்ஸ் படத்தில் அக்ஷரா ரெட்டி நடித்திருந்தார். அதன்பிறகு தான் அவருக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே கிட்டதட்ட 5 ஆண்டுகள் கழித்து அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். நட்டி நடித்து சுப்பிரமணியன் ரமேஷ்குமார் இயக்கிய ரைட் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் நல்ல கேரக்டர்களுக்காக தான் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அக்ஷரா ரெட்டி, தான் ரைட் படத்தில் மிக சிறப்பாக பணியாற்றியதாகவும், என்னுடன் இணைந்து நடித்த நடிகர்களை நான் பாராட்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் நட்டி பற்றி பேசும் போது அவர் மிகவும் எளிமையானவர், அற்புதமான நடிகர் என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து அருண் பாண்டியன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நேரத்தை கடைபிடிப்பவர்களாகவும், எந்த ஈகோவும் இல்லாமல் பழகியதாகவும் குறிப்பிட்டார்.
இத்தகைய குணங்கள் தான் அவர்கள் சினிமாவில் நிலைத்து இருக்க காரணமாக அமைந்தது என நான் நினைக்கிறேன் என்று அக்ஷ்ரா ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு தமிழக மக்களிடையே நல்ல அங்கீகாரம் கிடைக்க உதவியது. அதன்பிறகு எனக்கு நல்ல வாய்ப்புகள் வந்தது. ஆனால் என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் இறந்த பிறகுதான் நான் சினிமா துறையை முழுவதுமாக தேர்வு செய்தேன். படங்களிலும் கையெழுத்திட தொடங்கினேன்.
என்னைப் பொறுத்தவரை சவாலான கேரக்டர் வந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். வெறும் கவர்ச்சி பொம்மையாக இருப்பதற்கு பதிலாக மாறுபட்ட கேரக்டர்களை நான் ஆராய விரும்புகிறேன். ஒரு நல்ல கேரக்டர் என்றால் நான் தலை முடியை மொட்டையடித்து கூட கொள்வேன். அதற்காக தயாராக இருக்கிறேன். 2016ம் ஆண்டு வெளியான தங்கல் படத்தில் இடம்பெற்ற பெண் ஹீரோயின்கள் கேரக்டர் போன்ற ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவாகும்” என கூறியுள்ளார். அவரின் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.