தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் அதிக கவனம் பெறும் நடிகர் விஜய் சேதுபதி. இவரும் நடிகை ஐஸ்யவர்யா ராஜேஷும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்கள் என்பது கோலிவுட் வட்டாரம் அறிந்ததே. இருவரும் இணைந்து  ‘பண்ணையாரும் பத்மினியும்,’  ‘தர்மதுரை,’ ‘ரம்மி’ , ‘க/பெ.ரணசிங்கம் என நான்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இயல்பாக , அலப்பரை இல்லாத நடிப்பை வெளிப்படுத்தும் இந்த ஜோடிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு , பாலிவுட் வரை முன்னேறியுள்ளர் ஐஸ்வர்யாவும் , விஜய் சேதுபதியும் . இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் தனது நண்பரான விஜய் சேதுபதி தனக்கு கொடுத்த அட்வைஸ் குறித்தும் , அவரின் கேரக்டர் எத்தகையது என்பது குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


 






"சேது பேசுறதே வித்தியாசமாகத்தான் இருக்கும். அவர் டயலாக்லாம் அவ்வளவு நேர்த்தியாக சொல்லுவாரு. நீங்க ஏதும் மனப்பாடம் பண்ணிக்கிட்டு வற்றீங்களா அப்படினும் கேட்டேன் . அப்போ என்கிட்ட ஒரு டிப்ஸ் கொடுத்தாரு. நீ எப்போதுமே டயலாக் படிக்கும் பொழுது அதை புரிந்துக்கொண்டால்தான் , உனக்கு பேசும் பொழுது ரொம்ப எளிமையாக இருக்கும். மனப்பாடம் பண்ணால் வேலைக்கு ஆகாது , மனசுல நிக்காதுனு ...புரிந்து பேசும் பொழுது தவறுகள் பரவாயில்லை அப்படினு சொன்னாரு. அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது...அதுமட்டுமல்லாமல் சினிமாவை எப்போதுமே மதிக்கனும்னு சொல்லுவாரு. சினிமா மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் முழு ஈடுபாட்டோட வேலை செய்யனும்.. அன்னைக்கு செருப்பால அடி வாங்குனா கூட  அதை துடைத்துக்கொண்டு வேலை செய்யனும்.. அப்படி செய்தால் அது நமக்கான நல்லதை திருப்பி கொடுக்கும்..ஷூட்டிங் ஸ்பாட்ல நிறைய பிரச்சனைகள் இருந்தாலும் அதை கேமராவுல காட்ட முடியாதுனு சொன்னாரு. கேமரா நமக்கு தெய்வம் அதுக்கு முன்னால காட்ட கூடாது. க்ளோசப் ஷார்ட் நமக்கு பொக்கிஷம் அதை வீணாக்கக்கூடாதுனு சொன்னாரு. அதே போல யார் கதை சொன்னாலும் கதை கேளுங்க. மொக்கை கதையா இருந்தாலும் கேளு. அதுல இருந்து நாம நிறைய கற்றுக்கொள்ளலாம் அப்படினு சொல்லுவாரு.. சேது ஒரு திறந்த புத்தகம் போல.. விஜய் சேதுபதியோட  மேனரிஸம்ல ஒன்னு  இருக்கு அவரோட வாக்கிங் ஸ்டைல். அது வாத்து போல இருக்கும் ” என அவருடன் நெருங்கி பழகிய தனது அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.