ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கமல் சாருடன் இன்னும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை - நடிகை ஐஸ்வர்யாராய்

Continues below advertisement






நடிகை ஐஸ்வர்யாராய் பேசும்போது எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழிலில் பேச ஆரம்பித்தார், ஐஸ்வர்யாராய்.  இங்கு வந்ததில் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய குரு மணி ரத்னம் சார். அவர், எனக்கு எப்போதுமே குருவாகவே இருப்பார். இந்த வாய்ப்பளித்த அவருக்கு நன்றி. இப்படம் எனக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் சிறப்புரிமையை கொடுத்திருக்கிறது.  இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவோடு கனவும் இன்று நனவாயிருக்கிறது. இப்படம் சினிமாவிற்கு மாயாஜால உலகமாக இருக்கும்.




மணி ரத்னம் சார் மிகவும் திறமைசாலி. லைகா புரொடக்ஷன்ஸ், ரவிவர்மன் சார், ஏ.ஆர்.ரகுமான் சார், மற்றும் இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், மேக்கப் கலைஞர்கள் மற்றும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி.


Also Read | அட! அது நான் இல்லப்பா!! பெயரால் வந்த குழப்பம்! வழிமாறிப்போன பிரதமருக்கான வாழ்த்து!


ஜெயராம் சார் , பார்த்திபன் சார், சரத் சார், பிரபு சார், தோட்டா தரணி சார், ஶ்ரீகர் பிரசாத் சாத், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா மற்றும் இப்படத்தில் அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத நிகழ்வு.






தனது குரு துணையை மணி ரத்னம் சாருக்கு மௌனமாக தந்து வரும் ஹாசினி மேடமுக்கு நன்றி. ஆகையால், தான் மணி ரத்தினம் சார் எப்போதும் வெற்றியடைந்து வருகிறார்.


கமல் சார், ரஜினி சார் இருவருக்கும் இங்கு வந்ததற்கு நன்றி. ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கமல் சாருடன் இன்னும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார்.