தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகவுள்ளது.





இந்நிலையில் இப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை அதிதி,நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அதிதி படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக அதிக மீம்ஸ் டெம்பிளேட்டாக மாறிய ஒரு காட்சி குறித்து பேசினார்.


பைக்கில் பறந்த அதிதி..



விருமன் படபாடலின் காட்சி ஒன்றில் கார்த்தி பைக் ஓட்ட முன்புறம் படுத்தவாறே கைகளை நீட்டி பறப்பது போல இருப்பார் அதிதி. அந்தகாட்சி சோஷியல்மீடியாவில் செம வைரலானது. பலரும் ஐ படத்தில் வரும் காட்சியை ஒப்பிட்டு அது ஐ வெர்ஷன் என்றால் இது விருமன் வெர்ஷன் என பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட காட்சி குறித்து நேர்காணலில் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார் அதிதி.


அதில், ''அப்படி ஒரு காட்சி எடுக்கணும்னு அந்த ஸ்பாட்லதான் சொன்னாங்க. நீங்க பைக்ல ஒக்காந்துபோகனும்னு சொன்னாங்க. ஆனால் என்னய படுக்கவச்சி பறக்க வச்சிட்டாங்க. ஆனால்  ரொம்பவும் ஃபன்னாக இருந்தது. அது தொடர்பான மீம்ஸ்லாம் வந்தது. நான் எஞ்சாய் பண்ணேன்.ஐ படத்துல கிராபிக்ஸ்ல பண்ணாங்க. இந்தப்படத்துல என்னையை நிஜமாகவே படுக்க வைச்சி பறக்க வச்சாங்க. சொன்னதும் ட்ரை பண்ணி பாக்கலாம்னு நினைச்சேன்.ஒத்துவரலனா முடியலன்னு  சொல்லிடலாம்னு இருந்தேன். ஆனால் நல்ல சீனாகவே வந்தது'' என்றார்.