நடிகை அதிதி ஷங்கர் தனது பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 


தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் 2வது மகளான அதிதி ஷங்கர், கடந்தாண்டு கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடிப்படையில் மருத்துவரான அவர், சினிமாவுக்குள் நுழைந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விருமன் படம் அதிதிக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர். இந்த படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். 


இதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திலும் அதிதி ஒரு பாடல் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடியுள்ளார். வண்ணாரப்பேட்டையில என தொடங்கும் அந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தானும் அந்த படத்துக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அதிதி தெரிவித்திருந்தார். 


இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவிற்குள் நுழைந்த அதிதி, தனது தனி திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மாவீரன் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் நடிக்கும் படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் அதிதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி அதிதி ஷங்கர் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 


இப்படியான நிலையில், அதிதி பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற உடையில் பார்ப்பதற்கு தேவதைப் போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.