சினிமா வாரிசுகள் சினிமாவுக்கு வரும் கலாச்சாரம் நம் இந்திய கலாச்சாரம் என்னும் அடிப்படையில், பல முன்னாள் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் கலைஞர்கள் ஆகியோரின் மகன்கள், மகள்கள் சினிமாவிற்கு நடிக்க வருவது நம் தமித் சினிமா சூழலிலும் நிறைய நடந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் திடீர் என திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளது குறித்த தகவல் ஒரு சில மாதங்கள் முன்பு வெளியானது. வெளியானது முதலே ரசிகர்களில் அன்பை பெறத்தொடங்கினார். பட அறிவுப்புக்கு பிறகு அவரை உற்றுநோக்கும் கண்கள் அதிகரித்தன.
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்க உள்ள படத்தில் 'விருமன்' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது, அதில் செம்ம கியூட்டாக பாவாடை தாவணி அழகில் மின்னினார். இந்த ஒற்றை புகைப்படத்திலேயே... ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது. இதை தொடர்ந்து அவ்வப்போது இந்த படத்தில் நடிக்கும், இவரது கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது. 'விருமன்' படத்தில், மதுரை பெண்ணாக நடிக்கிறார். மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் தான் நடிக்கிறாராம் அதிதி. அவர் ஷூட்டிங்கில் மதுரை தமிழில் சொல்லி கொடுத்தது போல் பேசி அசால்ட் செய்து வருகிறாராம்.
முதல் படம் வெளியான பின்னரே அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆக வேண்டும், என்பதில் உறுதியாக உள்ளாராம் நடிகை அதிதி ஷங்கர். நடிகையாக அறிமுகமான பின் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர், தற்போது முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி, எம்.பி.பி.எஸ் படித்து வந்த அதிதி, தற்போது படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். போரூர் ராமச்சந்திரா கல்லூரியில் நடந்துஜா பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவருக்கு பட்டத்தை வழங்கினார். மேலும் பட்டமளிப்பு விழாவில் தனது தந்தை ஷங்கர், தாய் ஈஸ்வரி மற்றும் சகோதரர் அர்ஜித் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அந்த பதிவின் கீழ் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.