திரைப்படங்களில் எந்த அளவிற்கு ரீமேக் படங்களுக்கு மவுசு இருக்கிறதோ, அதே அளவிற்கு ரீமேக் செய்யப்படும் சீரியல்களும் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
ரீமேக் சீரியல்ஸ் !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டப்பிங் சீரியலான என் கணவன் , என் தோழன் சீரியலை பலருக்கு தெரிந்திருக்கும் . இந்தி மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன இந்த சீரியலை தமிழில் டப் செய்து வெளியிட்டிருந்தனர். இப்போது இது சரவணன் , மீனாட்சி என்ற தலைப்புடன் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கும் ஏகப்பட்ட வரவேற்ப்பு. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் சீரியலுக்கு மவுசு அதிகம்.
மாரி சீரியல் :
ஆடியன்ஸின் பல்ஸை அறிந்த இயக்குநர்கள் தற்போது ரீமேக்கில் களமிறங்கியுள்ளனர். அந்த வரிசையில் பெங்காலியில், வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரணாயினி என்ற சீரியல் தமிழில் 'மாரி' என்ற பெயரில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த சீரியல் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு குடும்ப ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது. தெலுங்கில் மாரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த ஆஷிகா என்பவர்தான் தமிழ் சீரியலிலும் நடிக்கவுள்ளார். இது இவரது முதல் தமிழ் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் கதாநாயகி , அதனால் ஏற்படும் விளைவுகளை பரபரப்பாக சொல்லும் கதைக்களம்தான் 'மாரி'.
ஒன்றுகூடும் நட்சத்திரங்கள் :
சேது திரைப்படம் , திருமதி செல்வம் சீரியல் போன்றவற்றில் நாயகியாக நடித்த அபிதா , மாரி திரைப்படத்தில் நாயகியின் அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.மேலும் நாயகியின் தாத்தாவாக நடிகர் டெல்லி கணேஷ் நடித்து வருகிறார். மேலும் நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த சீரியலில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
வனிதா வில்லியாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மாரி சீரியலில் சில எபிசோடுகள் முன்னதாகவே எடுக்கப்பட்ட நிலையில் , zee தொலைக்காட்சியில் வருகிற ஜூன் 27 ஆம் தேதி இந்த சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. விரைவில் ப்ரோமோ எதிர்பார்க்கலாம்.