ActorSuriya&Kamal;  தேசிய விருது பெற்றதற்காக  வாழ்த்திய நடிகர் கமலுக்கு நன்றி கூறியுள்ளார். சூரரைப்போற்று படம் ஐந்து விருதுகளை பெற்றிருந்த நிலையில், நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். 


நாட்டின் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 2020ம் ஆண்டில் வெளியான மிகச் சிறந்த  படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழில் நடிகர் சூர்யா நடித்து இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான திரைப்படம், சூரரைப் போற்று. இப்ப்டம் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னனி இசை அமைப்பாளர்,  சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த திரைப்படம் என மொத்தம் ஐந்து விருதுகளை வென்றது. இதில் படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என இரண்டு விருதுகளை பெறுகிறார் நடிகர் சூர்யா. மேலும், தமிழில் வெளியான மண்டேலா படம் இரண்டு விருதுகளையும், சிவரஞ்சினியும் சில பெண்களும் படம் மூன்று விருதுகளை வென்றுள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழ் திரைப்படங்கள் 10 விருதுகளை வென்றுள்ளது. 






பத்து விருதுகள் வென்ற தமிழ் சினிமாவின் மூன்று திரைப்படக் குழுவினரையும் பாராட்டி வாழ்த்து கூறினார் நடிகர் கமல்ஹாசன். தனது வாழ்த்தினை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் நடிகர் கமல். அதில், ”சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டிருந்தார். 






இதற்கு சூரரைப் போற்று படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா, ”அண்ணா, மிக்க நன்றி அண்ணா

” என நடிகர் கமலின் டிவீட்டினை மென்ஷன் செய்து  நன்றி கூறியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண