விஜய் டிவியின் ’வேலைக்காரன்’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை திவ்யா தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். குறிப்பாக இவருடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


மேலும், 'தினம் ஒரு திருக்குறள்' என்கிற தலைப்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.






குழந்தைகளுக்கு ஈஸியான வழியில் திருக்குறள் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் திவ்யா இதைத் தவறாமல் செய்து வரும் நிலையில், இன்ஸ்டாவில் திவ்யாவின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வாழ்த்தி வருகின்றனர்.


இந்நிலையில், முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திவ்யாவின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடரத் தொடங்கியுள்ளார். இதில் அகமகிழ்ந்து போயுள்ள திவ்யா முன்னதாக ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 






இந்நிலையில், திவ்யா பகிரும்  திருக்குறள் தொடர்பான செய்திகள் தான் ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தும் அவரை வாழ்த்தியும் வருகின்றனர்.