பிரபல நடிகர் யஷ் ஐந்து வருடங்களுக்கு பிறகு தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.


கன்னட சூப்பர் ஸ்டார் யஷ், கேஜிஎஃப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு நட்சத்திர அந்தஸ்தில் அடுத்த கட்டத்துக்கு உயர்ந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட ஆறு வருடங்களை அர்ப்பணித்து, அதே தோற்றத்தில் இருந்த யஷ், சமீபத்தில் தனது தலைமுடியை வெட்டிக் கொண்டார். மேலும் முடியை வெட்டிக்கொள்ளும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். யஷ் படங்களை முடிக்க ஐந்து வருடங்கள் நீண்ட தலைமுடி மற்றும் தாடியின் தோற்றத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


படத்தில் அவரது முரட்டுத்தனமான தோற்றம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ஒரு ஸ்டைல் ​​ஸ்டேட்மென்ட் ஆனது என்பதையும், இந்த படம் வெளியான பிறகு ரசிகர்களும் இதே தோற்றத்திலும் இருந்தனர்.வீடியோவில், யாஷ் தனது தாடியை ட்ரிம் செய்து, தனது தலைமுடியைக் குட்டையாக வெட்டி புதிய தோற்றத்தில் காணப்பட்டார். அவருடன் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா பண்டிட்டும் உடனிருந்தார். 


வீடியோ



 2018-ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் படத்தின் தொடர்ச்சியாக வந்த கேஜிஎம் இரண்டாம் பாகத்தில், யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில், ராக்கிபாய் கோலார் தங்க வயல்களின் மன்னராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, எதிரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறார்.


இந்தப் படம் இரண்டாம் நாளில் இந்தியளவில் ரூ. 240 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிரபல திரைப்பட விமர்சகரான  ரமேஷ் பாலா, தனது ட்விட்டர் பக்கத்தில், கே.ஜி.எஃப் 2 திரைப்படம், இராண்டாம் நாளில் ஹிந்தியில் 44 கோடி வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையானது பீகார், உத்தரபிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களிலும் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் மொத்தமாக 95 லிருந்து 96 கோடி வரை வசுல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண