பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனவும் திரைப்பட விமர்சனங்களில் அவர்களின் பெயர்களைக்குறிப்பிடாதது வருத்தம் அளிப்பதாக பாலிவுட் நடிகை யாமி கௌதம் தார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்


பவன் கிர்பலானி இயக்கத்தில் நடிகர்கள் சைஃப் அலி கான், அர்ஜுன் கபூர் ஆகியோர் நடித்த திகில் நகைச்சுவை திரைப்படமான 'பூட் போலீஸ்' கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ், யாமி கௌதம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பாராட்டி வரக்கூடிய நிலையில் , ஊடகங்களிலும் விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர்.





ஆனால் இந்த திரைப்பட விமர்சனத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸையும், என்னையும் ( யாமி கௌதமியையும்) குறிப்பிடாதது ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தனது டிவிட்டரில் யாமி  குறிப்பிட்டுள்ளார். மேலும் யாமி கௌதம் தார், ஆண் நடிகர்களின் பெயர்களை மட்டுமே தலைப்பில் போட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் டிவிட்டர் வாயிலாக குற்றம் சாட்டியுள்ளார்.


 






மேலும் ஒரு படம் என்றால்  பெண் சகாக்களுக்கும் சொந்தமானது என்ற உண்மையை ஊடக இணையதளங்கள் ஒப்புக்கொள்ளத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது மற்றும் அவர்களின் தலைப்புகளை எழுதும் போது மரியாதையுடன் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதோடு பல சமூக ஊடக பயனர்களும் யாமியின் கருத்தினை ஏற்றுக்கொண்டதோடு,  ஒத்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக சமூகத்தில் இந்த ஆணாதிக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் டிவிட் செய்து வருகின்றனர்.


Maanaadu Release Date: ரஜினியுடன் நேரடியாக மோதும் சிம்பு.. தீபாவளியை குறிவைத்த 'மாநாடு'.!